உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

>இளங்குமரனார் தமிழ் வளம் – 14

நூலாதலின் அதன் வழி வந்தது அன்று தொல்காப்பியம் என்றும், 'கேட்போர்' என்பது நூல் கேட்டற்குரிய அதிகாரிகளைக் குறிக்கும் என்றும், நூன்மரபு என்பது நூலினது மரபு பற்றிய பெயர் கூறுதலாம் என்றும் முனிவர் கூறுவதைக் கா. சு. மிகப் போற்றுகிறார். நூன்மரபுக்குக் கூறிய விளக்கத்தைச் சுட்டும் ‘கா. சு.' முனிவர் ஒருவரே இனிது காட்டினர் என்று பாராட்டுகிறார். தொல்காப்பியம் படித்தான் என்றவிடத்து முதற் சொல் ஆகுபெயர் அன்று. திருவள்ளுவர் படித்தான் என்ற விடத்து முதற்சொல் ஆகுபெயர். ஆகுபெயர்கள் சொல் மாற்றம் சிறிதும் இன்றி நின்றாங்குப் பொருள் தருவது. இந்தக் கருத்தை முனிவர் விளக்கியது போலப் பிறர் எவரும் விளக்கிற்றிலர் எனப் புகழ்கிறார்.

நிலம் பகுத்தோதுங்கால் நடுவணதைக் குறியிட்டாராகலின், அங்ஙனம் பகுக்கப்படும் நிலங்களுமாகாது, அவற்றின் வேறுமாகாது தனக்குரிய நிலம் நடு நிகர்த்ததாய் நிற்றல் பற்றி நடுவு நிலைத்திணை எனக் குறியிட்டாளுதலே ஆசிரியர் கருத்து என்னும் முனிவர் உரையையும் பிறர் கருத்துகளையும் எடுத் தெடுத்தாய்ந்து விளக்கும் பாங்கையும் உன்னும் கா. சு. முனிவரது உயர்ந்த வழக்கீட்டு ஆற்றலை குறிக்கும் எனப் பாராட்டுகிறார். அவ்வகையால் இறையனார் களவியல் உரையொடும் இயைத்துக் காண்கிறார். (74 -75).

வைத்தியநாத நாவலர் இயற்றிய இலக்கண விளக்கத்தில் தாம் காணும் குறைகளைச் சுட்டி எழுதிய இலக்கண விளக்கச் சூறாவளியை இயற்றினார் முனிவர். லக்கண விளக்கை அணைக்கும் சூறைக்காற்று என்னும் பெயரீடே இது, கண்டன நூல் என்பதைத் தெளிவிக்கும். இதனைக் காலத்தோடு சார்த்திக் கனிவால் பரிகின்றார் கா. சு. அதனால், "குற்றம் என்று பாராட்டத் தகாதவற்றையும் குற்றமாகக் கூறுதல் வழக்கமாய் ருந்தது” என்கிறார். 'மலைமகள்' என்பதில் பொருள் தெளிவாய் அமைந்திருக்கவும் அதனை 'மலையுமகள்' என்று பொருள் படக் கூடுமெனக் கண்டித்தல் முற்கால வழக்கொடு பட்டதன்று எனக் கா. சு. நயமாக மறுக்கிறார்.

திருவாவடுதுறைத் திருமடத்தைச் சார்ந்த ஈசான தேசிகர் இயற்றிய இலக்கணக் கொத்தில் மறுக்கப்படுவன பல இருந்தும் குறிப்பாகத் தம் நூல்களில் மறுத்ததை அன்றித் தனியே மறுப் பெழுதாமைக்குக் காரணம் அவ்வாறு செய்யும்படி முனிவரைத்