உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

119

தூண்டுவாரின்மையே என்கிறார் கா. சு. இதனால், சூறாவளிக்குத் தூண்டினார் உண்மை குறிப்பால் புலப்படுகின்றதென்க.

தருக்க சங்கிரக மூலமும் அதற்குரிய அன்னம்பட்டீயம் என்னும் உரையும் முனிவரால் மொழி பெயர்க்கப்பட்டது. தருக்க மதக் கொள்கை சைவசித்தாந்தக் கொள்கையோடு தகுவதென்று என்பதைக் கூறும் கா. சு. நூலின் பொருள் அமைதியையும், மொழி பெயர்ப்பு அழகையும் பாராட்டுகிறார்.

துறைசை ஆதீனஞ் சார்ந்த மரபட்டவணை நூலுக்குத் தருமபுர ஆதீனம் கண்டன நூல் வெளியிட, அக்கண்டனத்திற்குக் கண்டனம் முனிவர் இயற்றினார். அதில் “கண்டன நூலின் பிற்காலப் போக்கே அமைந்துள்ளது. ஆனால் முனிவர் எதிரிகள் மீது வசை பொழியவில்லை. சில இடங்களில் அளவிற்கு மிஞ்சிய நுட்பத்துடன் எதிரிகளைக் கண்டித்தமையும், தமது கூற்றிற்குத் தக்க காரணத்தை எதிரிகட்கு உரைத்தல் கூடா தென்று சொல்லும் பான்மையும் இக்காலத்தாரால் போற்றப் பட மாட்டா" என்கிறார். கா. சு.

66

சைவ சித்தாந்திகளை வழிபட்டுக் கேட்டால் மலைவறச் சொல்லுவார்கள். “என்று எதிரி படர்க்கையிற் சொன்னமையால் தான் சைவ சித்தாந்தி அல்லன் என்று அவன் கூறியதாகுமென முனிவர் கூறுதலை மறுக்கும் கா. சு. “தம்மையும் உட்படுத்திப் படர்க்கையில் கூறும் வழக்கம் இக்காலத்திலும் உள்ளது. அதனைக் குறை கூறுதல் கண்டனப் போக்கின் கடுமையை உணர்த்தும்” என்கிறார்.

கா.சு.

சிவஞான சித்தியார்க்கு எழுதிய சிவ சமவாதவுரை மறுப்புப் பற்றிக் கூறும் கா. சு. ஆசிரியர் வட நூற் பயிற்சியும் வடசொல் வழக்கு மிகுதியும் இதனுட் காணப்படுமாறொப்ப அவரது பிற நூல்களுட் காண்பதரிது என்கிறார். அந்நடையை 'மணிப்பிரவாளம்' என்றே குறியிடுகிறார். அதில் வரும் ‘எடுத்து’ என்னும் சொல்லுக்கு எழுதிய வைரக்குப்பாயம் பற்றியும் கா. சு. விளக்குகிறார்.

முனிவர் தடை ட வி விடை

கூறுதலில் தனித்திறத்தர் என்பதைக் காட்டும் நூல் கம்ப ராமாயண முதற் செய்யுள் சங்கோத்தர விருத்தி, இக்காலத்தில் கலாசாலைகளில் வாத சபைகளில் நிகழ்ச்சி போல்வது என்கிறார் கா. சு. இதனை இந்நாட்டு பட்டி மண்டபம் போல்வதென நாம் சுட்டலாம்.