உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

இளங்குமரனார் தமிழ் வளம்

14

நாடிய பொருள் கைகூடும் என்னும் பாடலில் எத்துணைக் குறைகள் கூற முடியுமோ அவ்வளவும் சொல் சொல்லாகக் கூறிப் பின்னர்ப் பிறர் அதனை மறுத்துரைக்க மாட்டாராய் அமையத் தாமே அவ்வமைப்பின் சிறப்பை எடுத்துரைத்தது அந்நூற் செய்தி. சின்னக்காஞ்சி சார்ந்த வைணவர் கம்ப ராமாயணம் ஒன்றே குற்றமற்ற நூல் என்றதற்காக, அச்செருக் கடக்க எழுந்த நூல் என்பது அஃதெழுந்த வரலாறு. இவ் வைணவர் வேறும் இரண்டு பாடற் பொருள் வினவ, அவற்றுக்கு நுண் பொருள் காட்டியமை முனிவர் அறிவுக் கூர்ப்புக்குச் சான்று எனலாம்.

முனிவர் இயற்றிய பெருநூல் காஞ்சிப் புராணம். அதன் முதற்காண்டம் மட்டுமே அவரால் முடிக்கப்பட்டது. அதன் பொருள் வளம், உவமை நயம், நீதி நூற் கருத்து, திருநகர்ச் சிறப்பு, பாலியாற்றுச் சிறப்பு, ஐந்திணை வளம், திணை மயக்கம், பொது மகளிர் இயல்பு, கல்விக் கழகம், அறம், மெய், அருமை, எள்ளாமை, ஆவணம், சிவம், மால், நகர், அடிமை, உயர்வு நவிற்சி, திருமுருகன், தமிழ்மறை, சிவதீக்கை, முப்பொருள், வீடுபேறு, தமிழ் மந்திரம், தீட்டின்று, பூசை, திருமணம், வியப்பு, ஒழுக்கம், சித்திர கவி மாலை மாற்று, திரிபங்கி என்னும் பகுப்புகளில் விரிவாக ஆய்கின்றார் (87-135).

66

உட்

மலையிலுள்ள மிளகுக்கொடி போய்க் காட்டிலுள்ள கொன்றை மரத்தின் மீது மரகதத் தோரணம் போற் படர்ந் திருப்பது, கிளியும் கோழியும் எதிரெதிர் நடக்கக் கூத்தர் கட்டிய நெடுங்கயிறு போலும்.'

66

கடற்கரைக் காகமானது மலைச் சாரலில் கிடைத்த பலாச்சுளையைக் கவ்விக் கப்பலுக்குக் கொண்டு போதல் இராவணன் சீதையைக் கொண்டு இலங்கை சேர்ந்தாற் போலும்

எனத் திணை மயக்கம் சிலவற்றைத் தொகுத்துக் காட்டுகிறார்.

சிவஞான

சிவஞான சித்தியார் சுபக்கத்திற்கும், போதத்திற்கும் முனிவர் வரைந்த உரையைத் ‘தனிப்பெரும் பேரூரை' என்றும், 'ஒப்பற்ற உரை' என்றும் பாராட்டுகிறார் கா. சு. (136). சிவஞான சித்தியார்க்குரிய சிவாக்கிர யோகிகள், மறைஞான தேசிகர், நிரம்வழகிய தேசிகர், ஞானப் பிரகாச முனிவர், சுப்பிரமணிய தேசிகர் ஆகியோர் உரையுள்ளும்