உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

121

"முனிவர் உரையே தலை சிறந்ததென்பது யாவரும் அறிந்தது’ எனப் பாராட்டுகிறார். அதற்குச் சான்றும் காட்டுகிறார்.

6

சிவ ஞான போத மாபாடியம் எழுதுவதற்கு முன் சிவ ஞான போதச் சிற்றுரை எழுதினர் என்றும், சிவாக்கிர யோகிகளும் வடமொழிச் சிவஞான போதத்திற்குச் சிற்றுரையும் பேருரையும் வடமொழியின்கண் எழுதியுள்ளனர் என்றும், அவை நம் முனிவர் உரைகட்கு ஈடாகா என்றும் கா. சு.கூறுகிறார். கா.சு. பேருரைச் சிறப்பு, சிவஞான போதப் பொருள், சிறப்புப் பாயிர ஆய்வு, பொருளொருமை, தூய்மை, மறையவர் முரண், மறை முடிவு, பொருள் நுட்பம் என்னும் தலைப்புகளில் சிவஞான போதத்தை ஆய்கின்றார். பொருள் நுட்பம் என்பதில் சிவஞான போதப் பன்னிரு நூற்பாக்களின் பொருளையும் திரட்டித் தருகிறார். அது தனியொரு நூற் பொருளைத் தெள்ளிதின் விளங்கும் நடையில் சுருக்கித் தரும் திரட்டுப் பாகென அமைந்துளது அவ் அருமையுடன் நூலை நிறைவிக்கிறார். கா.சு’(147-150)

பேருரையர்;

சிவஞான முனிவரர் மெய்கண்ட இலக்கணப் புலமைக்கு ஆழி; கண்டன நூல் யாப்பில் நிகரிலாத்திறவர்; இருமொழி ஏந்தல்; உரையும் பாட்டும் ஒன்றிய உயர்வர்; மொழி பெயர்த்து அதர்ப்படயாத்த அறிவர், தண்டமிழ் நலத்தர் என்பவை கா. சு. வரைந்த இவ்வரலாற்றாய்வால் தெள்ளிதிற் புலனாம்.