உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த வரலாறு

இந்நூல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக 1755 ஆம் நூலாக, 1984 இல் வெளிவந்தது; ஆனால் இது நூலுருப் பெற்ற வரலாறு தனியானது.

செந்தமிழ்ச் செல்வியில் 1924- ஆம் ஆண்டு “சைவ சித் தாந்த வரலாறு” என்னும் தொடர் கட்டுரை வரைந்தார் கா. சு. அதே போல் "சைவ சித்தாந்த வரலாற்றுச் சுருக்கம்”, "சைவ சித்தாந்த விளக்கம்” என்னும் கட்டுரைகளையும் தனியே வரைந்தார். அம்மூன்றையும் முப்பகுதியாக்கி, ஒரு நூலுருவாக்கம் கொண்டதே” சைவ சித்தாந்த வரலாறு என்பதாம். இதனால், நூலாக்கம் புதுவது எனினும், அதன் கட்டுரையாக்கம் மணிவிழாக் கண் பெருமையது எனல்

சாலும்.

""

இனிச் சைவ சித்தாந்த உண்மை வரலாறு என்பதொரு நூல் கழக வெளியீடு 28 ஆக வெளிவந்தது. அது 1927 மே; அப்பதிப்பு, கட்டுரைப் பதிப்பை நோக்க இரண்டாம் பதிப்பாதல் விளக்கம். அது சைவ சித்தாந்த வரலாறு' என்பதன் முதற் கட்டுரையை மட்டும் கொண்டதாகும். அதற்கு ஆங்கில மொழி யாக்கப் பதிப்பும் உண்டு. அவ்வாறே மூன்று கட்டுரைத் தொகுப்பாகிய ‘சைவ சித்தாந்த வரலாறு' என்னும் நூலுக்கும் ஆங்கில மொழியாக்கம் உண்டு. ஆதலால் தனித்தனி நான்கு நூல்கள். பொருள் வகையால் ஒரு நூலாகி அமைகின்றது என்க.

சைவ சித்தாந்த வரலாறு ( 1-26) சைவ சித்தாந்த விளக்கச் சுருக்கம் (27-37) சைவ சித்தாந்த விளக்கம் (38-56) என்னும் மூன்றன் தொகுப்பாகிய நூல் 56 பக்க அளவான் இயல்கின்றது. அவற்றை முறையே காண்போம்.

“சைவம் என்றது சிவம் என்னும் செந்தமிழ்ச் சொல் வடிவாய்ப் பிறந்து சிவனொடு தொடர்புடைமை என்னும் பொருளில் விளங்குவது. சிவனைப் பற்றிய நிலையையும், சைவ நூல்களையும் சிவனடிசேர்தற்குரிய நெறியையும் அச்சொல் குறிக்கும். சித்தாந்தம் என்பது, சித்த அந்தம் என்ற

ரு