உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

123

சொற்களால் ஆகி முடிபின் முடிபு என்று பொருள் பெறும். சைவநூல்களின் முடிந்த முடிவைக் கூறும் நூல்களைச் சைவ சித்தாந்தம் என்ப" என நூற் பொருளை விளக்குகிறார் கா. சு.

முதற் சைவ நெறி, திருநெறி, திருநெறியதமிழ் ஒளி நெறி, குரு நெறி, ஒரு நெறி எனச் சேக்கிழார், திருமூலர் முதலாம் பெருமக்களால் கூறப் படுதலை எடுத்துக் காட்டி அவற்றின் பொருண்மைச் சிறப்பையும் நன்கு விளக்குகிறார்.

சைவ சித்தாந்தவராவார், “நற்கலை கற்று யோகம் பயின்று பதமுத்தி எய்துதற்குரிய ஞானமெய்தித் தம்மையும் தலைவனையும் உணர்ந்தோரே" என்பதை நால்வர் பாடல் கொண்டும் நாட்டுகிறார் கா. சு. அக்கொள்கைக்கு இலக்கணமாக, “கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோக

முற்பத ஞான முறைமுறை நாடியே தொற்பத மேவித் துரிசற்று மேலான தற்பரங் கண்டுளோர் சைவசித்தாந்தரே”

என்னும் திருமந்திரம் விளங்குதலைச் சுட்டுகிறார்.

மேல்வரும் செய்தியைச் சய்தியைச் சித்தாந்தம் உரைக்கும் பொருட் சுருக்கம், சித்தாந்த வரலாறு என இரு பகுப்பாக்கிக் கொண்டு ஆய்கிறார் கா. சு.

பொருட் சுருக்கம்

உலகிலுள்ள பொருள்களுள் உயிருள்ளன அறிவுடையன.

உயிரில்லன அறிவில்லாதன.

அறிவுள்ளது இயக்க, அறிவில்லாதது இயங்கும். உயிரில்லாதது தானே இயங்காது. உறங்கும் காலத்தும் உயிருண்மை பற்றியே உடம்பின் உட்கருவிகள் இயங்குகின்றன. உ உயிர் பிரிந்தபோது அவை இயங்கா.

கண்டது கொண்டு காணாததை அறிதல் வழியால், உலகம் தோன்றி நின்று மறையும் வண்ணம், தன்னை இயக்கும் ஒரு முதல்வனை இன்றியமையாதது.

உயிர் அறிவுள்ளதாயினும் உடம்பில் பற்றுள்ளது. உடம்பு உலகின் பகுதியாம். உடம்பின் பற்றுக் காரணமாகத் தோன்றி மறைதலாகிய பிறப்பு, இறப்பு உடை ய உயிர், தன் வயம் இல்லாதது. உலக முதல்வன் தன் வயம் உடையவன்.