உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

>இளங்குமரனார் தமிழ் வளம் – 14

இறைவன் துவக்குண்ணாதவன். முற்றறிவன். துவக் குண்ணும் சிற்றறிவுயிர்க்காகவே உலகைத் தொழிற் படுத்துகிறான். உலகின் தொழிற் பாடு உலகுக்காகவும் அன்று; தனக்காகவும் அன்று. உயிர்க்காக.

உயிர் ஒன்றைப் பற்றி நின்றே இயங்குவது. கட்டுள்ள காலத்து உலகைப் பற்றி இயங்கும், கட்டற்ற போது இறையைப் பற்றி இயங்கும். உயிர் அறிவிக்க அறியும் இயல்பினது, அறிவிக்கும் முதல்வனையன்றி, அதற்கு வேறு நிலைபேறு இல்லை.

உயிரையும் உலகையும் உலகையும் இறைவனோடு தொடர்பு படுத்துவது அவன் திருவருள். ஆதலால், படைப்பு, காப்பு, அழிப்பு, மறைப்பு, அருளல் ஆகிய ஐந்தொழில் நடத்துதற்குத் திருவருளே காரணம். அதனால் அத்திருவருளே தாய் எனப் படும்.

கடவுள், உயிர், உலகம் என்னும் மூன்றும் வெவ்வேறானவை. முதல்வன் திருவருளே மூன்றையும் தொடர்பு படுத்துவது.

இவை சித்தாந்தப்பொருள் அல்லது சித்தாந்த உண்மை 6 என்கிறார் கா. சு.

மக்கள் வாழ்க்கை செவ்வைப்பட்ட பின்னரே மெய்யுணர்வுப் பொருள் குறிக்கும் சொற்கள் ஒரு மொழியில் தோன்றும். அதன் பின்னரே நூல்கள் தோன்றும். ஆகலின் நூல்கள் முதலிய வரலாற்றுக் கருவிகள் ஒழிந்து போயினும் சொல்லாய்வு பெரிதும் பயன்படும் கருவியாம் என்கிறார்.

66

“அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்” என்னும் தொல்காப்பிய நூற்பாவால், தமிழ்நாட்டிலே இறைவனது திருவருள் பெற்றுத் தமிழ் மக்கட்கு ஒளி நெறி காட்டவல்ல பெரியோர் தமிழ்ப் பெரு மக்களாய் விளங்கினரெனவும் அவர்வழி நின்றொழுகுவார் எண்வகைப் பட்டனர் எனவும், அவர்கள் தாம் கண்ட அரிய நூற் பொருளையும் கடவுள் அருள் பெறு முறையையும் உணர்விக்கக் கருதி இயற்றிய நூல்கள் மறையெனப்படும் எனவும் உரைக்கின்றார்.

66

-

‘அந்தணர் ஒருவகைத் துறவியராவர். அது பற்றியே அந்தணர் இலக்கணத்தைத் திருவள்ளுவர் நீத்தார் பெருமையில் ஓதினார். தமிழிலே அறம் - பொருள் இன்பம் வீடு என்னும் நான்கினையும் உணர்த்தும் நான்மறைகள் இருந்தன. அவை நிறை மொழி மாந்தரால் இயற்றப் பட்டன. உண்மை