உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் 'கா.சு.' கலைக்களஞ்சியம்

125

அறிவுச்சுடர் கொளுத்தும் அவர் அறிவர் எனப்பட்டனர். சைவ சித்தாந்த உண்மையறிவு தமிழ் நாட்டினர்க்குத் தமிழ்ப் பெயராலேயே கிடைத்தன. தமிழ் நூல்கள் தமிழர் மடிமையால் காக்கப் படாது ஒழிந்தன. தமிழ் நூற் பொருள் கிளக்கும் வடமொழி நூல்கள் காக்கப் பட்டு நாடெங்கும் பரப்பப் பட்டன” என்கிறார்.

66

"தமிழ் நெடுங் கணக்கையும் இயல்நூலையும் வகுத்த அறிவர், மொழியுள்ள அளவும் உண்மை நூற் கருத்து நிலை பெறுமாறு தமிழ் எழுத்தினும் சொல்லினும் இயல்நூல் அமைப்பினும் பாதுகாத்து வைத்தனர். தமிழர் மெய்ப் பொருள் உணர்வில் தலைசிறந்தார்" என்பதற்குச் சான்றாக விளங்கும் சொற்கள் சிலவற்றை எடுத்துக்காட்டுகிறார்.

பார்ப்பார்: அன்பு மிக்க வழிபாட்டினால் கடவுட் காட்சி பெறவல்ல தமிழ் மக்கள். கடவுளை ஒரு வடிவத்திலே வழிபாடு செய்வதற்கு முதல் நின்றுதவுவாராகிய ஆதி சைவரே பண்டைப்

பார்ப்பார்.

கடவுள்: இதன் நேர்பொருள் கடந்துள்ள பொருள். எதனைக் கடந்தவன் எனின் உலகத்தை என்பது. அறிவு முதிர முதிரக் கடவுள் உள்ளத்தைக் கடந்துள்ளவன் என்பது விளங்கும். விளங்கவே சொற் கடந்தவன் அவன் என்பது தெளிவாகும்.

இயவுள்: எல்லாவற்றையும் முதல்வன் இயக்குகின்றான்

என்னும் கருத்தில் அமைந்த பழஞ்சொல் இயவுள்.

கந்தழி: பற்றிலான் சுட்டிறந்தவன் என்னும் பொருளுடையது கந்தழி. கந்து என்பது முதலில் தறி என்பதை உணர்த்திப் பின், பற்றும் ஒரு பொருளைக் குறிப்பதாய்ப் பின், பற்றுக்கோடாக உள்ளதை உருவகிக்கப் பயன்பட்டது.

உடல் உயிர்: இச்சொற்கள் உருவகப் பொருளில் இலக் கணத்துள்ளும் வழங்குவதனால் தமிழ்நாட்டினர் யாவர்க்கும் உயிர் உடம்பு என்பதன் வேறுபாடு தொன்றுதொட்டே நன்கு தெரிந்ததென்று என்பது அமையும்.

சிவம் : செம்மையடியாகப் பிறந்த சொல் சிவம். நன்மை, நேர்மை, சிறப்பு, மங்கலம், சுகம் என்கின்ற பண்பினையும் செந் நிறம் என்ற நிறத்தையும் குறிக்கும். செம் பொருள் என்பதன் பொருளே சிவம் என்பதற்கும் ஆம்.