உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

இளங்குமரனார் தமிழ் வளம்

14

இறைவன்: இது 'இறு' என்பதன் அடியாகப் பிறந்தது. று என்பது தங்குதல் என்னும் பொருளுடையது.

இறு

ச்

ஓம்: ஓம்பு என்பது ‘ஓம்' என்பதன் அடியாகப் பிறந்த சொல். பாதுகாப்பவன் என்னும் பொருளது. எழுத்து வடிவாலும் தமிழே என்பதை விளக்குவது. இவை தமிழ்ச் சொற்களாகவும், மொழி பெயர்ப்பல்லனவாயும் விளங்குவன ஆதலால், இச் சொற்கள் கூறும் உண்மைகள் ஆ ஆரியக் கலப்பின் பின் உண்டானவை அல்ல" எனத் தெளிவிக்கிறார். திருமூலர் முதலிய பேரறிஞர் தமது அறிவு நூல்கள் வாயிலாகப் பண்டே விளங்கிய சைவ சித்தாந்த ஒளியைத் திகழச் செய்தனர். மெய் கண்டதேவர் சிவஞான போதமென்னும் சைவ சித்தாந்தத் தலைமணி நூலைத் தமிழுக்கு உயிரான பன்னிரண்டெழுத் தெனப் பன்னிரண்டு நூற்பாவில் ஓதினார். சிவஞான சித்தியார், சிவப் பிரகாசம் முதலிய நூல்களும் எழுந்தன. இவை செய்யுள் நூல்களாக இருந்தமையால் சைவ சித்தாந்த நூல்களின் முடிவை உணர்தற்குரிய தெளிவினைக் கற்பார்க்கு நல்கும் கதிர் மணி நூலாகச் சிவஞான முனிவரால் சிவஞான போதப் பேருரையும் சிற்றுரையும் கிளர்ந்தன.

66

நூல் பாதுகாப்பு ஒன்றினாலேயே ஆரியர் தமிழரின் மேம்பட்டனர். நூல் பாதுகாவாமையினாலேயே தமிழர் தம் பெருமையை இழந்தனர். தமது சமய நெறி இன்னதென உணர்ந்து கடைப் பிடித்தலினாலேயே ஏனையோர் உயர்ந்தனர். அங்ஙனம் செய்யாமையால் சைவர் அஃகி ஒழிந்தனர். திருக் கோயில், திருமடம் முதலிய சைவ சமய நிலையங்களைப் புறச் சமயத்தார் பற்றிக் கொள்ள விடுத்து வாளாவிருக்க நேர்ந்தது. சைவ சித்தாந்த நூல்களை இனியாவது நாம் கை நழுவ விடாது போற்றிக் காப்போமாக.

இவை கா. சு. தரும் சைவ சித்தாந்த வரலாற்றுச் சுருக்க மாகும் (1-26)

66

சைவசித்தாந்த விளக்கச்சுருக்கம்” என்னும் கட்டுரை (27-37) இறை, உயிர், உலகம், மாயை, கலை ஆகியவற்றைப் பற்றிய கலைச் சொற்களை விளக்குவதாகவும், சித்தாந்தப் பொருளடைவு கூறுவதாகவும் அமைந்துள்ளது. கா. சு. தரும் உயிர் விளக்கம் வருமாறு.

மும்மலம்: 1. ஆணவம்: உலகப் பற்றினை விளக்குந் தன்மை.

2. மாயை: உலகின் சார்பால் அறிவு மயங்குந் தன்மை.