உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

127

3. கன்மம்: அவாவியதை நுகர்தற்குரிய முயற்சியை

எழுப்பும் தன்மை.

சிவம் அறிவிக்க அறியும் தன்மையுடையதாய் அநாதியே அறியாமை காரணமாகத் தனது இயல்பு உணராது உலகப் பற்றின் வயமாய்ச் சார்ந்ததன் வண்ணமாம் தன்மையால், இறைவன் அருளால் திருத்தமுற்று நன்னெறி எய்தற்குரியதாய் உள்ளது அறிவு. தனக்குறும் நலத்தைத் தானே அறியாத வண்ணம் அதற்கு உலகப் பற்றினை விளக்கும் தன்மை ஆணவம். அசித்தாகிய உலகின் சார்பால் அறிவு மயங்கும் தன்மை மாயை. அவாவியதை நுகர்தற்குரிய முயற்சியை எழுப்பும் தன்மை கன்மம். இம் மும்மலப் பிணிப்பால் அவ்வுயிர்க்குப் பிறப்பு இறப்பு உண்டாம். அஃது உலகத்தைப் பற்றி நின்றபோது உலக மயமாய் இருப்பினும், சிவத்தைச் சார்ந்த போது சிவமயமாய் நிற்கும். சிவத்தின் பால் பற்று மிக மிகத் தன் இயல்புக்கு வேறாகிய உலகின் பற்றுத் தேய்ந்து தேய்ந்து மாய்ந்தொழியும். உலகப் பற்று முழுதும் அற்றுப்போகவே உயிர் சிவத்தோடு இரண்டறக் கலந்த நிலையெய்தி அதில் நின்றும் அகலாது பேரானந்தப் பெருவாழ்வு பெற்றுய்யும்.

உலகம் என்னும் பகுதியில் 36 தத்துவங்களையும் முறையே விளக்கி, பதமுத்தி, பரமுத்தி ஆயவற்றைக் கூறுமளவில் கட்டுரையை நிறைவிக்கிறார்.

மூன்றாம் கட்டுரை, ‘சைவ சித்தாந்த விளக்கம்.’ இதில் உலோகாயதர், புத்த சமயத்தார், சமணர் ஆகிய புறப்புறச் சமயத்தார் காள்கைகளை விளக்கிப் புறச் சமயமாகிய வைதிகப் பக்கத்தைத் தொடங்கி மீமாம்சம், வைசேடிகம், நியாயம், சாங்கியம், யோகம் என்பவற்றையும் விளக்குகிறார்

கா. சு.

அதன் நிறைவாகப், “புறப் புறச் சமயங்களும் புறச் சமயங் களும் சட உலகத்தை ஆராய்ந்து பார்த்ததில் அதற்கு மூலம் பிரகிருதி தத்துவம் என்பதே முடிவாயிற்று. ஆன்மா உண் டென்பது சமண சமயத்திற்கும், வைதிக சமயங்களுக்கும் பொது வான கொள்கையாகும். புறச் சமயங்களுள் தருக்க நியாய மதங்களும் யோக மதமுமே கடவுள் உண்டென்று கூறுவன. ஆனால், அவைகளில் கடவுள் உலகத்தோடு இரண்டறக் கலந்து நிற்கும் நிலை தெளிவாகக் கூறப்படவில்லை. தருக்க யோக மதங்களே மாத்துவாச்சாரியார் கொள்கைக்கு அடிப்படை யானவை" என்கிறார்.