உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

இளங்குமரனார் தமிழ் வளம்

14

ஏகான்ம வாதத்தையும் சைவ சித்தாந்தக் கொள்கையையும் ஒத்துப் பார்த்தால் சமயங்கள் பலவற்றையும் ஒத்துப் பார்த்ததன் பலனுண்டாம் என்று கூறும் கா. சு., அவ்விரண்டன் கொள்கை களையும் ஆய்ந்து, “உலகமனைத்தையும் உயிர்களையும் தொழிற் படுத்துவதற்குக் கடவுள் அவற்றோடு இரண்டறக் கலந்த நிலையில் நிற்க வேண்டும். உடம்பை நடத்துகின்ற உயிரானது எப்படி உடம்போடு அத்துவிதமாகக் கலந்து இருக்கின்றதோ, அவ்வாறே கடவுளும் உலகத்தோடு அத்துவிதமாகக் கலந்து நிற்கின்றார். கதிரவன் ஒளியானது கண்ணொளியோடும் உலகப் பொருளோடும் கலந்து எப்படி அவற்றை விளக்குகின்றதோ அவ்வாறே கடவுளினுடைய திருவருளும் ஆன்ம அறிவோடும் உலகத்தோடும் கலந்து ஆன்மாவை நடத்தி ஆட்கொள்கின்றது. இதுதான் கடவுள் அத்துவிதமாய் இருக்கிறார் என்பதற்குப் பொருள். அங்ஙனம் கொள்ளாமல் கடவுளே உலகமாயிருக்கிறார் என்று கொள்ளுதல் அறிவிற்குப் பொருத்தமானதன்று. ஆதலால் அத்துவிதம் என்னும் சொல்லின் உண்மைப் பொருள் உணர்ந்து உண்மையான அத்துவிதக் கொள்கையுடையது சைவ சித்தாந்தம் ஒன்றேயாம். இதனால்தான் சைவ சித்தாந்தத்தில் கூறும் அத்துவிதத்தைச் சுத்தாத்து விதமென்று கூறுதல் மரபு என்று முடிவு செய்கின்றார்.

66

“கடவுள் உலகம் உயிர் என்னும் முப்பொருள்களையும் அத்துவிதமாக ஒற்றுமைப்படுத்தி நிற்பது கடவுளது திருவருளே ஆதலால், அத் திருவருளே எல்லாம் என்று பெரியோர் கூறினர்" என்று நூலை முடிக்கப்புகும் கா. சு.

அருளில் பிறந்திட் டருளில் வளர்ந்திட் டருளில் அழிந்திளைப் பாறி மறைந்திட் டருளான ஆனந்தத் தாரமு தூட்டி

அருளால் என்னந்தி அகம்புகுந் தானே'

என்னும் திருமந்திரச் சான்றால் நிறைவிக்கிறார்.

பொதுப் பார்வையாக நோக்க மூன்றும் ஒன்றாய், ஒன்றை ஒன்று விளக்குவதாய் அமைந்து மும்மடி வலியுறுத்தும் ஒருமைக் காட்சி வழங்குகின்றது, சைவசித்தாந்த வரலாறு எனப்படும் நூல்.