உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் திரட்டு

இரண்டு பாகங்கள்

"திருநெல்வேலி மணிவாசக மன்றத் தலைவர் திரு. கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள்” இயற்றிய உரையுடன், “சென்னை, பி. இரத்தின நாயகர் ஸன்ஸ்” அவர்கள் பதிப்பிப்பாக வெளி வந்தது இந்நூல். இதன் முதற்பாகம் 18-9-39 இலும், இரண்டாம் பாகம் 2-11-39 இலும் முன்னுரை பெற்றுள.

முதற் பகுதியில் 35 புலவர்களால் பாடப் பட்ட 870+3 பாடல்களும், இரண்டாம் பகுதியில் பெயர் சூட்டிய புலவர்கள் 57 பெயரும், பெயர் சுட்டப் படாத பிறரும் பாடிய பாடல்கள் 865+2ம் இடம் பெற்றுள. ஆதலால் இருபாகங்களிலும் 1738 பாடல்கள் உரை, கருத்து, குறிப்பு ஆகியன பெற்றுள்ளன (நான்கு குறள்களை ஒரு பாடலாக லாக எண்ணியமையால் விடு பாடு 3).

தனிப்பாடல் தொகுப்பும் புதுவது அன்று. முன்னரே நிகழ்ந்ததே! உரையும் முன்னரே காணப்பட்டதே! ஏறத் தாழ 300 ஆண்டுகளின் முன்னர்த் தோன்றியது தமிழ் நாவலர் சரிதை! முதற்கண் தனிப்பாடல் திரட்டு என்னும் வடிவு கொண்டது, தில்லையம்பூர் சந்திரசேகர கவிராச பண்டிதரைக் கொண்டு, முகவை சேதுபதி மன்னர் அமைச்சராக விளங்கியவரும், மதுரைத் தமிழ்ச் சங்க நிறுவனர் பாண்டித்துரையார் தந்தையார் ஆகத் திகழ்ந்த வரும் ஆகிய பொன்னுசாமித் தேவர் தொகுத்த தனிப் பாடல் திரட்டாகும் (1862).

"முதற்கால புலவர்கள் கருத்து நுட்பத்தையும், பிற்காலப் புலவர்கள் சொல் நுட்பத்தையும் குறிக்கோளாகக் கொண்டனர்” என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார். கா. சு.

உரைவரைய நேர்ந்த காரணத்தையும் குறிக்கிறார் கா. சு: தனிப்பாடல் திரட்டுக்கு உரைகள் பல இருப்பினும் அதன் கணுள்ள பாடல்களை வரலாற்று முறைக்குத் தக்கபடி வரிசைப் படுத்திப் பாடல்களின் பொருளை நன்கு தெளிவு படுத்திக்