உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

இளங்குமரனார் தமிழ் வளம்

14

காட்டும் விளக்கவுரை இன்றியமையாததாக இருப்பதைக் கருதி அத்தேவையை நிறைவேற்றும் நோக்கத்தோடு இயற்றப் பெற்றுள்ளது என்கிறார். மேலும், என்கிறார். மேலும், வரலாற்று முறைக்கு ஏற்றவாறு புலவர்களின் வரிசை ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளமை, பாடல்கள் திருத்தம் பெற வேண்டிய இடங்களில் திருத்தம் பெற்றமை, பாட்டின் நோக்கத்திற்கும், பொருள் விளக்கத்திற்கும் வேண்டும் குறிப்புகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் சேர்க்கப் பட்ட பட்டமை என்பவற்றைக் குறிப்பிடுகிறார். இத் தொகுதிகளில் இடம் பெற்ற பாடல்கள் 17 ஆம் நூற்றாண்டு வரை திகழ்ந்த புலவர்களின் அரிய பாடல்களே என்றுரைக்கிறார். புலவர்கள் பெயர்கள், அவர்கள் பாடிய பாடல்களின் தொகை, செய்யுள் முதற்குறிப்பு அகராதி என்பவை முன்னும் பின்னுமாக இணைக்கப் பெற்றுள.

இரண்டாம் பாகத்தின் முன்னுரையில் பாடினோர் நிலை, பாடப் பட்டோர் இயல்புகள், பாடு பொருட் சிறப்பு என்பவை தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. அத்தொகுதியிலேயே செம்பாதி பாடிய புலவர்களின் பெயர் சுட்டப் படாத பாடல்கள் உள்ளன. (865/432).17 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட புலவர்கள் பாடல்களும் இடம் பெற்றுள்ளன.

முதற்பாகத்தில் முதல் இடம் பெறுபவர் ஔவையார்; ஆனால், அத்தொகுப்பில் மிகுதியான பாடல்களைப் பாடியவர் காளமேகப் புலவர். முன்னவர் பாடல்கள் 74; பின்னவர் பாடல்கள் 187. காளமேகரை அடுத்த எண்ணிக்கை பாடியவர் கடிகை முத்துப் புலவர். அவர் பாடல்கள் 107. ஔவையார் பாடல் எண்ணிக்கையை யடுத்து கம்பர் பாடல்களும் (68), பல பட்டடைச் சொக்க நாதப் புலவர் பாடல்களும் (65) உள.

ம்

ஒரே பாடல் மட்டும் தொகுப்பில் இடம் பெற வாய்த்தவர் எல்லீசு துரையும், சுப்பிரமணியப் புலவர் என்பாரும்! பட்டினத்தார் பாடல் ஒன்றும் திருஞானசம்பந்தர் பாடல் ஒன்றும், திருமங்கையாழ்வார் பாடல் ஒன்றும் தனிப்பாடலாக இடம் பெற்றிருத்தல் வியப்பே! முன்னவர் ஒரு பாடலும், அவர் நூல் தொகுப்பில் உள்ளதே. பின்னவர்கள் பாடிய பாடல்கள் ஆலி நாட’ என விளியும், 'சம்பந்தப் பெருமாள் கேளீர்' என விளியும் அமைந்திருத்தல் ஆய்வுக்குரிய செய்தி. இரண்டுமே அகத்துறைப் பாடல்கள். இரண்டாம் பாகத்திலும் ஒரே பாடலால் பெயரறியப்படும் புலவரும் சிலருளர். அத்தொகுதியிலும் ஔவையார் பாடல்களும் 5 இடம் பெற்றுள. முதற் பாகத்திலே

5