உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.’ கலைக்களஞ்சியம் ஓ

131

இணைத்திருக்க வேண்டியவை பின்னுக்குத் தள்ளப் பட்டதற்குக் காரணம் காட்டப்படவில்லை; புலவர்கள் கால அடைவும் போற்றப்படவில்லை. இல்லை எனின், முதலாழ்வார் மூவர் பாடல்கள் இரண்டாம் தொகுதியில் இடம் பெற்றிரா. திரு வாசகம், குசேலோ பாக்கியானம் முதலியவற்றில் உள்ள சில பாடல்கள் பல வித்துவான்கள் பாடிய தனிப்பாடல்களில் இ ம் பெற்றிரா. பெயரறியப்படாத புலவர் பாடல்களுடன் இவற்றை ணைக்க இயலாதே! மேலும், இறையனார் பாடியதாக வரும் குறுந்தொகைக் கொங்குதேர் வாழ்க்கைப்பாடல், மதுரைச் சொக்கநாதர் பாடியதாகக் குறிப்புச் செய்து இடைமடுத்திருக்க நேர்ந்திராது. ஆதலால், பெரிதும் முன்னைத் தனிப்பாடல் திரட்டைத் தழுவியே அமைத்து, உரையும் கண்டார் கா. சு.

எனலாம்.

“புருஷன், ஸ்திரி, நிரபராதி, நிமிஷம், ராஜகுமாரத்தி, ராஜகுமாரன், தர்மார்த்த காமமோட்சம், இரமிக்க என்றெல்லாம் வரும் சொல்லாட்சிகள் கா. சு. வரைந்த பிற நூல்களில் காணற்கு அரியவை. இவற்றையெல்லாம் நோக்க அந் நாளில் தமிழ்ப் புலமையால் சிறந்து விளங்கிப் பலர் புகழ் பேற்றுக்கு இடமாக இருந்த கா. சு. பெயரால் தனிப்பாடல் திரட்டைக் கொண்டுவர வேண்டும் என்று பதிப்பகத்தார்க்கு இருந்த காதலே அப்பதிப்பாக வெளிவந்துளது எனலாம்.

எந்த வரலாற்றை எழுதினாலும் வரலாற்று ஆய்வும், வரலாறு உடையார் பாடிய பாடல் ஆய்வும் செய்தலை வழக்காறாக -மாறா நெறிமுறையாகக் கொண்டு தமக்கு என ஒரு தடம் பதித்தவர் கா. சு. அத்தடம் தனிப்பாடல் திரட்டில் இல்லாமை நம் முடிவுகோளுக்கு அரணாக அமைகின்றது. மற்றொன்றும் சுட்டலாம்; உரை காணா நூலுக்கு உரைகண்டதோ, வெளிப் UL ா நூலை வெளிப்படுத்தியதோ ஆகாமல் பதிப்பகத்தார்க்குத் தம் பெயரால் நூல் வழங்குதல் அளவாலேயே பாட்டும், குறிப்பும், உரையும் அமைந்துள்ளன எனலாம்.

இலக்கிய வரலாறு முதலாவதாகவும் முதன்மையான தாகவும் படைத்தவர் தமிழ்க் கா. சு. அவர் புலவர்கள் வரலாற்றைப் பற்றிக் கருத்துச் செலுத்தாமல், வழிவழியாகக் குறிப்பிட்ட பாடல் நிகழ்ச்சிக் குறிப்பளவில் அமைகின்றார். பிறர் வரைந்த விளக்கவுரைகளும் இல்லாமல் பொருள் குறிக்கும் அளவிலேயே அமைகின்றார். புலவர் வரிசை எண்ணோ, பாடல் தொடர் எண்ணோ இடம் பெறாமையும் குறிக்கத்தக்க குறையாக உள்.