உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

>இளங்குமரனார் தமிழ் வளம் – 14

ஔவையார் தனிப்பாடல்கள் முதற்பாகத்தில் முதல் டத்தைப் பெற்றுள்ளன. அவ் வவ்வையாரைப் பற்றி இலக்கிய வரலாற்றில் எழுதியுள்ளார்.

66

ஒட்டக்கூத்தர்,

புகழேந்தி

இவர்கள் திகழ்ந்த பன்னிரண்டாவது நூற்றாண்டிலேயே ஒளவையார் என்னும் பெண்மணியும் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி முதலிய நீதி நூல்களையும் அசதிக்கோவை முதலிய சிறு காப்பியங்களையும், அட்டாங்க யோகக்குறள் என்னும் ஞான நூலினையும் இயற்றியும், பெண்ணையாற்றின் ஒருபுறம் பாலும், ஒரு புறம் நீரும் செல்லப் பணித்தது முதலிய அற்புதங்களை நிகழ்த்தியும், பெரும் புலவரோடு வாதாடி வெற்றியடைந்தும் பெரும்புகழோடு திகழ்ந்ததாக அறிகிறோம்" என்கிறார் (II. 123).

சுந்தரமூர்த்திகள், சேரமான் பெருமாள் நாயனார் என்பார் தமக்கு முன்னர், ஒளவையார், விநாயகர் அருளால் கயிலாயம் சென்றனர் என்னும் செய்தி மேற் குறித்த இலக்கிய வரலாற்றுக் காலத்திற்கு மாறாவதால் இந்த ஔவையாரை வேறொருவர் எனக்கொள்ள நேர்கின்றது.

சில இடங்களில் பாடல் தலைப்பில் நிகழ்ச்சியை விரித் துரைக்கிறார். ஒளவையார் பாடல்களில் 1, 9, 18, 49, 53 ஆகிய ஐந்து பாடல்களுக்குத் தலைப்பில் நிகழ்ச்சிக் குறிப்புகள் உள்ளன. ளவையார் மழையில் நனைந்து கொண்டு பாரி என்னும் இடையன் வீட்டிற்குச் சென்று அங்குத், திருமணமில்லாமல் இருந்த அங்கவை, சங்கவை என்னும் பெண்கள் தந்த சிற்றாடையை உடுத்தியும், கேழ்வரகுக் களியுண்டும் மகிழ்ந்தார் என்னும் செய்தியைக் குறிக்கின்றார். இதற்குச் சான்று என்னவென்று புரியவில்லை. பாரிவள்ளல் தானே தமிழிலக்கியம் கண்டது!

"வாதக்கோன் நாளையென்றான்" என்னும் பாட்டின் உரையின் மேல் குறிப்புரையாக “வாதநாடி அடங்கில் ஒரு நாளிலும், சேத்துமநாடி அடங்கில் ஒரு நாழிகையிலும், பித்த நாடி அடங்கில் ஒரு நிமிஷத்திலும் உயிர் நீங்கும்” என்னும் நாடியிலக்கணம் குறித்துள்ளமை பாடற் பொருளைப் புரியவும் சிறப்பாக உணரவும் துணை செய்கின்றது. இவ்வாறு பாடற் பொருளுக்கு விளக்கம் தரும் குறிப்புகளைச் சிலச்சில இடங்களில் வழங்குகின்றார்.

இனி இலக்கணக் குறிப்புகள், சொல் விளக்கம் ஆகியனவும் க்குறிப்புரைப் பகுதியிலே கா. சு. மேற்கொண்டு உள்ளார்.