உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

இளங்குமரனார் தமிழ் வளம் – 14

உட்பொருளும் மருத்துவம் முதலிய பிறதுறைச் செய்திகளும் அரிதாகக் குறிப்புரையில் வழங்கப்பட்டுள்ளன.

"பட்டத்து யானையின் கட்டு அவிழ்க்கப் பட்டால், அது சோழநாட்டினரைப் போய்த் தாக்குமாதலின் சோழனது குலமகளிரது தாலி அவிழும்” என்றார் என்பது ஒட்டக்கூத்தர் பாடிய “தென்னர் தென்னன்” என்னும் பாட்டின் உட்பொருள்.

(ஒட்.12).

"பித்தத்தினால் உண்டாகிய வெப்பம் தணியும்படியாக வாழை நிழலில் இருத்தல் வைத்திய நூலில் கூறப்படும்” என்று “சத்தம் பயிலும் புலவர் கதலித்தண் தோட்டம் புகும்” என்னும் பாடற் குறிப்பில் சுட்டுகிறார்.

66

66

(ஒட். 13).

அரசு என்பதற்கு அரசமரமெனப் பொருள் கொண்டு அரசமரத்தின் நிழல், ஆத்தி, வேம்பு, பனை முதலியவற்றின் நிழலைப் பார்க்கிலும் பெரியதென்று தொனிப்பொருள் கொள்வதுமுண்டு” எனத் தொனிப் பொருளும் காட்டுகிறார். (கம்பர். 14)

சொற்பொருள் விளக்கமும் குறிப்புரையில் உண்டு.

மடலேறுதல் என்பது பனங்கருக்காற் செய்த குதிரையேறித் தான் விரும்பிய பெண்ணின் படத்தை அதன் மீது வைத்துப் பார்த்துக் கொண்டிருத்தல். அப்போது கண்டவர்கள் பனங் கருக்கால் மடலூர்ந்தவன் உடம்பைக் கீறின், வெண்ணீர் தோன்றின் அவனுக்கு அவன் விரும்பிய பெண்ணை மணம் செய்வித்தல் மரபு” . (சொக்க. 11)

“உயிர்கள் கடவுளையடைவதற்கு இருவினை யொப்பு என்னும் பக்குவம் ஏற்படவேண்டும். அதாவது புண்ணிய பாவப் பயன்களில் ஒத்த வெறுப்பு மனத்தில் அமைதலேயாகும்”.

(பலபட்டடைச்சொக்க. 16)

இன்ன காரணத்தால் இவ்வாறு கூறப்பட்டது என்றும்

குறிக்கிறார்.

66

"தலைவன் மேவுங்காலத்தில் இரா நீளவேண்டும் என்றும், பிரிந்த காலத்தில் இரவு விரைவில் கழியவேண்டும் என்றும் எண்ணுவது தலைவியின் இயல்பு. இரண்டிற்கும் மாறாக இர வானது இருப்பதால் அது பொல்லாதெனப் பட்டது' "மேவிலுடனே விடியும்” என்னும் பாடற் குறிப்பில் காரணம் காட்டுகிறார். (சொக்க. 40).

وو

என