உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

>இளங்குமரனார் தமிழ் வளம் – 14

உலகியற்றியான் என்பதற்கு, உலகு தானே தோன்றுவது என்பது சமணர் கொள்கை. கடவுள் உலகினைப் படைத்தான் என்பது இக்குறளாதலின் வள்ளுவர் சமணர் அல்லர் என்கிறார்.

ஐந்து அவித்தல் ‘என் ஐந்து அவித்தல்' ‘அன்பர் ஐந்து அவித்தல்' எனக் கொள்ளல் வேண்டும் என்றும் கூறி, மலர் மிசை ஏகினான் என அன்பரது உள மலர் மேல் சென்றவன் என்பது போல் கொள்க என்கிறார். பொய் தீர் ஒழுக்கமாவது, மெய்ப் பொருளையே அடையும் ஒழுக்கம் என்கிறார்.

உயிர் அழியாது என்பது வள்ளுவர் கொள்கை என்பதை ‘மாயும் என் மாயா வுயிர்” என்பதால் நிலை செய்கிறார்.

66

“குருடன் குருடற்கு வழிகாட்டஇயலாது; கவலையுடையான் கவலையுடையானுக்கு வழிகாட்ட முடியாது” என்று விளக்கித் தனக்குவமை இல்லான் தாள் சேர்தலே, மனக் கவலை மாற்றும் மருந்தாம் என்கிறார்.

தாளாவது திருவடி. இடைவிடாது நினைதலே சேர்தல். இறைப் பணி கொண்டவரே தாள் சேர்ந்தவர். அறிவு ஒரு தாளும், செயல் ஒரு தாளும் என இரு தாளாம். உலகப் பொருளைப் பற்றிய மனம் திருத்தாளைப் பற்றியவுடன் கவலை தீரலின் ‘மாற்றல்' என்றார். மனமாற்றத்தால் கவலை மாற்றம் ஏற்படும் எனக் கூறுகிறார்.

உயிர் நிலைபெற்றது. அதனை மன்னுயிர் என்பதால் திருவள்ளுவர் உரைத்தார். அவர் ஆதி பகவன் என்று இறைவனைக் குறித்தது, தமிழ்ச் சொல் வடிவேயாம். "மாதொருபாகன் மாதொரு கூறன்” என்பது. அதனைக் கதை கட்டும் வன்மை யுடையவர் வள்ளுவர்க்குத் தாய் தந்தை என்றனர் - இவ்வாறு பொது மறைத் தலைப்பில் வள்ளுவரை விரிவாக ஆய்கிறார் கா. சு. கிடைத்த அளவால் நூலாக்கல் நலம்.

பண்டைத் தமிழர் நாகரிகம் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்து தனி நூலாகியது. சமயக் கருத்துகள், ஆங்கிலத்தில் வரைந்த சமயச் செய்திகள் ஆகியவை தமிழர் சமயத்தில் பொதிந்தவையாகும்.

பத்திரிகை ஆராய்ச்சி என்னும் பகுதி மிக விரிவான தாகும். செய்தித் திரட்டு என்பதும் அதிலுள்ளது. பல்வேறு பட்ட அச்செய்திகள் பெரும்பாலும் இதழுக்கு 32 பக்க அளவில் அமைகின்றன. அவற்றுள் சில:-