உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

141

பிப். 25: சர் ராமேசம் என்பார் முசுலீம் கிளப்பில் பேசினார். ஒரு பிள்ளையும் பிறக்கக் கூடாது என்று செய்வதற்கன்று கருத்தடை; காப்பாற்ற முடியாத நிலையில், பிள்ளை பெறா திருக்கத் தடை செய்யவே. இது சமயத்திற்கு மாறானதன்று.

அ அகில திருவாங்கூர் மாசபை மார்ச்சு 4 இல் கூடியது. அதில் தமிழர்க்கும் இடமிருத்தல் வேண்டும். திருவாங்கூர் வரலாற்றுச் சான்று தமிழில் இருப்பதாலும், அரசமொழியாகத் தமிழ் இருந்தாலும், தொல்பொருளை ஆயும் முயற்சியில் தமிழருக்கு இடமிருக்க வேண்டும். மலையாளத்தார் தமிழர்களைச் சகோதரராகப் பாவியாமலும், தமிழைச் சொந்த மொழியாகக் கருதாமலும், தன்னலம் கருதுவாராயின் அது இரங்கத் தக்க செய்தியாகும்.

கனம் சவகர்லால் நேரு, தமிழரே நேரு, தமிழரே நாகரிகத்திலும் வணிகத்திலும் பெயர் பெற்றிருந்த பூர்வ மக்களாவர் என்று தெரிவித்திருக்கிறார்.

உழவர்க்குரிய பணவுதவியைக் குறைந்த வட்டிக்கு அரசு தந்தால் அவர்கள் கடனில் இருந்து மீண்டு மற்ற நாட்டவர் போல் விருத்தியடைவர்.

மார்ச்சு 2 உடன் முடிவாகிற வாரத்தில் சென்னை மாகா ணத்தில் நோய் விவரம்:

காலரா கண்ட

எண்ணம்

இறந்தவர்

வைசூரி கண்ட எண்ணம்

இறந்தவர்

பிளேக் கண்ட எண்ணம்

இறந்தவர்

1099

614

1085

315

41

39

மார்ச்சு 8: சென்னை திருவட்டீசுவரன் பேட்டை கோயில் குளத்தில் தற்கொலை செய்து கொண்ட பார்த்த சாரதிக்கு வயது 25. கிண்டிக் குதிரைப் பந்தயத்தில் சொத்தை எல்லாம் இழந்ததுதான் காரணம்.

மைசூர் காசான் என்னுமிடத்தில் ஒரு தந்தை தன் மகளை ஒருவனுக்கு மணம் செய்வித்து, பின் அவளைக் கடத்திச் சென்று அவள் பிளேக்கில் இறந்ததாகக் கூறி வேறொருவனுக்குத் திருமணம் செய்து தந்தான்.