உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

>இளங்குமரனார் தமிழ் வளம் – 14

நீதிமன்றத்தில், “அவன் கீழ்சாதியான்; சாத்திரப்படி சரியான மணமன்று” என வாதித்தான். இரண்டாம் மணத்தை நீக்கி, அத்தந்தைக்கு ஐந்தாண்டுச் சிறையும், 500 ரூ அபராதமும் விதித்தது நீதி மன்றம்.

சென்னைச் சட்ட சபையில் நியாயக் கட்சியில் இருந்து சென்னை மேயர் குமாரராசா, எம். ஏ. முத்தையா செட்டியார் முதலிய 11 பேர்கள் மார்ச்சு 6 மாலை பிரிந்து சென்று, சுயாட்சிக் கட்சி ஒன்று ஏற்படுத்தினர். அதில் கனம் எம். டி. றி. ரெங்க நாதமுதலியார் சேர்ந்திருந்து மீண்டுவந்து நியாயக் கட்சியைச் சேர்ந்தவருள் ஒருவர்.

பரோடா நாட்டில் 15 அங்குலமுள்ள குள்ளர்களின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. பழம் புராணம் கூறும் வாலகில்லியார் போலும்.

பருத்தி விதையை விதைக்குமுன் 2 மணி நேரம் வெயிலில் உலர்த்த வேண்டுமென்று தேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

செயிப்பூர்க்கு அருகில் உள்ள ஓர் ஊரில் நெடுநாள் திறக்கப்படாமல் இருந்த நெற் களஞ்சியம் திறக்கப்பட்ட போ அதில் தவசம் எடுக்கப் போன வேலைக்காரன் இறந்தான். வேறு இருவரும் இறந்தனர். இதனால் நெல் அறைகளை அடிக்கடி திறந்து காற்று உலாவும்படி வைத்தல் வேண்டும்.

தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடத் தலைவர்கள் தமிழை வளர்க்க முயலாமல் பிறமொழிகளைப் போற்றுவது தாய்மொழிப் பற்றின்மையைக் குறிக்கும். இந்தி மொழியானது பொதுமக்கள் பேச்சிற்கு, ஒருக்கால் பயன்படத் தக்கதேயன்றித் தமிழைப் போல் இலக்கியப் பயிற்சிக்குத் தக்கதன்று. எதிர்காலத்தில் கலாசாலையில் தாய்மொழி உயர்தரக் கல்விக்குக் கருவியாக இருக்க வேண்டுமாதலின் பிறமொழிகளைக் கட்டாயமாக்குதல் தாய்மொழி குன்றுவதற்கும் மாணவரின் அநாவசிய உழைப்பிற்கும் இடமாகும்.

அ அமெரிக்க நியூயார்க்கு மாகாணத்தில் காரியட்ரீகா என்பவர் 1500 சதுரமைல் விரிவுள்ள காட்டில் மலைகளு ஏரிகளும் நிறைந்த இடத்தில் குடிசை கட்டி வதிந்து தீக் கோளில்லாது பாதுகாக்கும் காவற்காரியாய் இருந்து வருகிறாள். முற்காலத்துத் தாடகை முதலியவர்கள் இவள் தன்மையர் போலும்.