உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

143

பிசித்தீவில் இந்தியர்கள் கூலி வேலைக்குத்தான் தகுதி யென்ற கருத்து நிலவுகிறது. சட்டப்படி அங்குள்ள இந்தியர்கள் நிலம் வாங்கக் கூடாது.

நிலநூற் பேராசிரியராகிய வாட்சு என்பவர் 7. 9. 35 இல் நார்விச்சில் பேசிய போது, உலக அதிசயங்களிலெல்லாம் மனிதனது மூளையே மிக வியக்கத் தக்கது. 80 அடிநீளமும் 20 டன் கனமுமுள்ள பிராணிகளுக்குக் கோழிமுட்டையளவு மூளை தான் இருந்தது. ஒரு டன் உடம்புக்குக் காலவுன்சு மூளை தான் இருக்கிறது. சுமார் 160 பவுண்டு கனமுள்ள மனிதனுக்கு 3/2 பவுண்டு மூளை இருக்கிறது. மூளைப் பெருமையால் தான் மனிதன் உலகத்தை வென்றிருக்கிறான் என்றார்.

கண்ணில்லாமல் பொருள்களைப் பார்க்கும் ஆற்றல் மனிதனிடம் அமைந்து கிடப்பதாகவும் அவ்வாற்றலை முயற்சியாலும், பழக்கத்தாலும் பயனுறும்படி செய்யலாம் என்று சீமை யில் கண் மருத்துவர் ஒருவர் கண்டு பிடித்துள்ளார். 30.10.35 இல் சேலத்தில் கூடிய சேலம் பார்லிமெண்டு என்னும் சபைக் கூட்டத்தில் எந்த மொழியை இந்தியாவுக்குப் பொது மொழியாய்க் கையாளலாம் என வாக்குவாதம் நடந்தது. ஆங்கிலத்தைச் சிலரும், இந்தியைப் பலரும் தழுவிப் பேசினர். பின்னையோர் ஆங்கிலத்தை அன்னிய மொழியென்று கழ்ந்தனர். அதைப் பேசுதல் அடிமைத் தனமென்றும் பேசினர். மொழிநூல் அறிந்தவர்கள், ஆங்கிலம் ஆரிய மொழிகளில் ஒன்றென்பதை அறிவர். மக்களிடத்துள்ள

மொழியின் மேல் சுமத்துவது அழகாகாது.

L

பகைமையை

18.10.35 இல் பீகார் இந்து சபைத் தலைவர் திரு. சகத் நாராயணலால், டாக்டர் அம்பேத்காரது மதமாற்றத் தீர்மானத் திற்குத் தாம் வருந்துவதாகக் கூறினார். தென்னாட்டிலுள்ள சிவநெறியுயர் கொள்கைகளை டாக்டர் அம்பேத்கார் அறிந்திருந்தால் அவ்வாறு அவர் மத மாற்றம் விரும்ப மாட்டார். இந்து மதம் என்று ஒரு தனி மதம் இல்லை என்பதும் அவர் அறிக (இச் செய்தியை வேறோரிடத்தும் எழுதுகிறார்). இவ்வாறு பல்வேறு நிகழ்ச்சிகள், சொற் பொழிவுகள் ஆகியவற்றை எழுதுகிறார். தம்மோடு சம நிலை வாக்குப் பெற்ற மில்லருக்குப் பூண்டி அரங்கநாதர் சட்ட மேலவைக்கு விட்டுக் கொடுத்த பெருந்தகைமையைப் பாராட்டுகிறார் (1: 11: 252). சென்னை (1:11:252) மாநகரின் பழைய அமைப்பை எழுதுகிறார் (1.10.216). நிலவியல்,

-