உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

இளங்குமரனார் தமிழ் வளம் 14

ரொட்டி வகை செய்தல், எழுதுகோல் வகை, சோப்பு ஆகியவை செய்தல் முதலியவற்றை விளக்குகிறார். ஆழ்வார்கள் வரலாறு, நெப்போலியன் வரலாறு, மேனாட்டுக் கதைகள் ஆகியனவும் டம் பெறுகின்றன. புறநானூற்றுப் பாடல்கள் சில ஆங்கில ஆக்கமுறுகின்றன. கா. சு. பல்கலைச் செல்வர் என்பதைத் தெளிவுறக் காட்டும் கண்ணாடி மணிமாலையாகும். சிறந்த இதழுக்கு வழக்கமாக வரும் பொருள் முட்டுப் பாட்டு நோயால் அவ்விதழ் ஓராண்டு அளவில் நின்று விட்டது போலும்.

ஒரு

மணிமாலையில் அரும்பொருள் கட்டுரைப் போட்டி என ரு போட்டியும் வைக்கப்பட்டுள்ளது. கா. சு. எழுதிய நூல்களுள் ஒவ்வொரு படியும் ரூ. 102 ம் முதற் பரிசாகவும், நூல்களுடன் ரூ. 52 ம் இரண்டாம் பரிசாகவும், நூல்கள் மட்டும் மூன்றாம் பரிசாகவும் வழங்கப்பட்டுள்ளது. அதற்குரிய கட்டுரைத் தலைப்புகள்:

1. பருத்தித் தொழில் (Cotton Industry)

2. பூகம்பம் - பூகாரிலும் குவெட்டாவிலும் நிகழ்ந்தன வற்றை ஒத்துப் பார்த்தெழுதுதல்

3. ரேடியோவினால் நடக்கும் விசித்திர வேலைகள்.

4. மேல் நாட்டு விளையாட்டுகள் (Tennis, Foot Ball etc).

66

விளம்பரம் செய்வதே வியாபாரத்திற்கு அழகு" என அறிவித்து, ஒரு பக்கத்திற்கு ரூ. 2-00 என்றும், அரைப் பக்கத்திற்கு ரூ. 1-00 என்றும், கால் பக்கத்திற்கு ரூ. 0. 8-0 என்றும் விளம்பர விகிதம் இருந்தும் ஒன்றிரண்டு விளம்பரங்களே மொத்தத்தில் கிடைத்ததென அறிய முடிகின்றது. அவையும் நூல் விளம்பரம், போட்டிப் பரிசு விளம்பரம் என்பன.

பொருட் பொருளார், அறிவுப் பொருட் பக்கம் தலை சாய்த்தும் பாராமையால் மயால் பல பல இதழ்கள் இவ்வாறு தலை சாய்ந்தே போகின்றன என்னும் குறிப்பை உணர்த்தும் செய்தி இது. இது பாடமாக நாட்டுக்கு அமைந்தால் நலம் என்பதால் இக்குறிப்பைச் சுட்ட நேர்கின்றது.

கா. சு. திருவாவடுதுறைத் திருமடத்தின் வழக்குக்குச் சான்றுரைத்து நலம் செய்துள்ளார். உ. வே. சாமிநாதரின் 81 ஆம் பிறந்தநாட் கொண்டாட்டம் 6-3-35 இல் நிகழ, அதற்குப் பதினான்கு அடியில் ஓரகவற்பா இயற்றிப் பதிப்பித்துள்ளார் (1-3:90-91) இவை கா. சு. வரலாற்றுக் கருவிகள். மணிமாலை சங்கச்