உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூற் கொள்கையும்

தமிழ் மொழியமைப்பும்

சேலம் செவ்வாய்ப்பேட்டை, தமிழ் நெறி விளக்கப் பதிப்பகத்தின் மூன்றாம் வெளியீடாக 1939 இல் வெளி வந்த நூல் இது.

நூலின் பெயர்க்குத் தக, முதற்பகுதி மொழிநூற் கொள்கை விளக்கமாகவும் ( 1- 60), அடுத்த பகுதி தமிழ் மொழியமைப்புப் பற்றியதாகவும் (60-156) அமைந்துள்ளது. முன்னதில் மொழிநூற் கொள்கை, எழுத்து வடிவம், மேலைநாட்டு மொழி நூல் வரலாறு, எழுத்தொலி இயல்பு, சொல்லமைப்பு என்பனவும்; பின்னதில் திராவிட மொழிகள், உயிர் எழுத்து, மெய்யெழுத்து, வேர்ச்சொல், பெயர்ச்சொல், வேற்றுமை, எண்கள், பெயரடை, வினைச் சொல் மொழியொப்புமை என்பனவும் ஆயப் பட்டுள்ளன.

“மொழி நூற் கொள்கைகளைக் கூறும் நூல் தமிழில் அறவே ல்லை எனக் கூறலாம். மொழிகளின் தோற்றம், வளர்ச்சி, அமைப்பு, இனம்போன்ற அரும்பெரும் பொருள்களை விளங்க விரித்துரைக்கும் சிறந்த மேனாட்டுப் பெருநூல்கள் போன்றதொரு சிறு நூலேனும் இதுவரை இங்கு வெளி வந்த தில்லை. இந்நூல் இக்குறையைப் போக்கும் முறையில் முன்னின்றுதவும் முதற் புதுநூல் ஆகும்” என்னும் பதிப்புரையும், ஆங்கில நூற் கல்வி பயிலாத தமிழ் இலக்கண மாணார்க்கர்க்குப் பயன்படும் பொருட்டு இச்சிறு நூல் இயற்றப் பெற்றது. “ஆங்கிலங் கற்றவர்க்கு மொழிச் சார்பாக ஆங்கில மொழியிலுள்ள பெருநூல்களைப் பயில்வதற்கு இது தோற்றுவாயாகும்” என்னும் முகவுரையும் இந்நூல் முதன்மையையும் பயன்பாட்டையும் விளக்குவனவாம்.

கருத்து வெளிப்படுத்தும் கருவி, ஒலி ஒன்றுமேயன்று. படம் எழுதிக் காட்டல், கைக்குறிக் காட்டல், வண்ணக் கொடிகள் எடுத்துக் காட்டல், தோற் சாட்டையால் அறைந்து காட்டல் ஆகியனவும் பிறவும் கருத்து வெளிபடுத்து கருவிகளே என்கிறார். கா. சு.’