உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

இளங்குமரனார் தமிழ் வளம் 14

உணர்ச்சி வெளிப்பாடுகளே ஒலிக் குறிப்புகள் ஆவதையும், அவ்வொலிக் குறிப்புகள் சொற்கள் ஆதலையும் எடுத்துக் காட்டுகளுடன் நன்கு விளக்குகிறார் (எ-டு; மியா - பூனை (தமிழ்); டின் டின் (ஆங்); புல் புல்; குக்கூ; கா கா).

நாவின் மென்மை வன்மைகளுக்கு ஏற்ப ஒலித் திரிபாதல், ஒரு பொருட் பன்மொழி தோன்றும் அடிப்படை, ஒலியுறுப்புகள், சொல்லமைதி, சொற்றொடரமைதி ஆகியவையும் இப்பகுதியில் விரிவாக ஆயப்பட்டுள்ளன.

எழுத்தொலியியல், சொல்லமைப்பியல், சொற்பொருளியல் என மூவியல்களில் மொழி நூல் இயலுமாறும், உலக மொழிக் குடும்ப வரலாறு, மக்கள் இனமும் மொழியினமும் தொடக்கத்தில் ஒத்திருந்து பிற்காலத்தில் பல இட டங்களில் மாறுபடுதல் என்பவை மொழிநூற் கட்டுரையின் ஆய்வுப் பொருளாக அமைகின்றன.

இறுதியில் சுட்டிய கருத்தை வலியுறுத்துவார் போல் பல மொழிப் புலவர் ஒருங்கு கூடிப் பல பேச்சுக்களின் இலக்கணத்தையும் சொற்கோவையையும் ஒப்பிட்டுப் பார்ப்பின் மொழி மூலங்களும் மொழியமைப்பொற்றுமையும் நன்கு விளங்கும். “பலமொழிக்கும் மூலமான ஒரு மொழியும் தூரத்தில் உதித்துக் காட்சி தருதலும் கூடும்' என்பது (156) ஒளிமிக்க மையம் ஒன்றனைச் சுட்டி ஆய்வாளரைத் தூண்டும் அருமையதாம்.

தமிழில் முதற்கண் வட்டெழுத்து ஏற்பட்டதென்று அறிஞர்கள் சுட்டிக் காட்டுவதைக் குறிக்கும் கா. சு. மோகஞ் கா.சு.மோகஞ் சதாரோவில் பட எழுத்து வழங்கியதையும், சீனரிடத்தும், அமெரிக்கரிடத்தும், எகிப்தியரிடத்தும் அப்பட எழுத்துகள் வழங்கியமையையும், டக்கர் என்பார் ஆங்கிலத்தில் எழுதிய மொழியியல் வரலாறு (Introduction to the Natural History of Language) கொண்டு விளக்குகிறார்.

சொல் எண்ணத்தினைத் தெரிவிக்கும் ஒலிவடிவாய் உள் நின்று எழுதலின் சொல்லும் சொற்பொருளும் வேறு அல்ல” என்னும் கருத்து மொழிநூற் கொள்கையாளரிடத்து நிலவியமையை மேலைநாட்டு மொழிநூல் வரலாற்றுப் பகுதியில் சுட்டுகிறார் கா.சு.

"சொல் தக்க காரணப் பெயராய் இருக்கும் மொழியே சிறந்தது' என்னும் பிளேட்டே கருத்தை உரைத்து ‘மொழி பொருட் காரணம் விழிப்பத் தோன்றா” என்னும் தொல்காப்பிய