உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தமிழ்க் ‘கா.சு.’ கலைக்களஞ்சியம் ஓ

5

நூற்பாவை இணைத்துக் காண வைக்கிறார் கா. சு. பதினெட்டாம் நூற்றாண்டில், பல மொழித் தொடர்பைத் தீர்மானிக்கச் சொல்லாய்வு மட்டும் போதாது, இலக்கண ஆய்வும் வேண்டற்பாலது என்னும் கருத்து வளர்ந்ததையும் அதனால் மொழிக் குடும்பம் காணப்பட்டு அவ்வாய்வு விரிந்து வருதலையும் விளக்குகிறார் கா. சு.

காதிற் கேட்கும் ஒலி மூளை வழியாக நினைவில் அழுந்தி நினைவாற்றல் மூளையில் தொடர்புற்றுப் பேச்சு நரம்புகளை இயக்க, பேச்சு நரம்புகள் பேச்சுக் கருவிகளின் தசைப் பற்றுகளை இயக்கி எழுத்தொலிகளை உண்டாக்குதலைக் குறிக்கும் கா. சு., மூச்சுப்பை, குரல்வளை, குரல் நாண், நா, இதழ் ஆகிய ஒலியுறுப்புகளை அறிவியல் முறையில் விரிவாக விளக்குகின்றார். அவ்வுறுப்புகள் செவ்விதின் அமையாமையால் ஏற்படும் ஒலித்திரிபு, கேடு ஆகியவற்றையும் சுட்டுகிறார்.

லி

வாயிலுள்ள கருவிகள் ஒன்றையொன்று தொடாமல் பலவகையாக இயங்குவதால் உயிரொலி உண்டாகும் என்பதையும், கருவிகள் ஒன்றையொன்று ஒற்றுவதால் உளதாம் ஒலி ஒற்றொலி அல்லது மெய்யெழுத்தொலி உண்டாகும் என்பதையும் உயிரொலிகள் எல்லாம் மூச்சு வெளிச் செல்லும் காலத்தே உளதாம் எனினும் ஆய்தச் சார்புடைய ஓ, ஊ என்ற ஒலிகள் மூச்சு உட்செல்லும் போதும் ஒலிப்பனவாம் என்பதையும் சுட்டும் கா. சு; “ஒலி எழுப்பிய காலை உளதாகும் காற்றலைகள் பல வகைச் சுழல்களாக வடிவெடுக்கின்றன. அவ்வடிவுகளை அவை தாக்கும் மணல் தட்டின் மீதும், விளக்கின் ஒளி அசைவாலும், எழுதுகோல் அசைவாலும் காட்டக்கூடிய கருவிகளை மேலை நாட்டினர் கண்டிருக்கிறார்கள். அவற்றின் உதவி கொண்டு எழுத்தொலிகளின் இயற்கை வடிவங்களை அறிந்து கொள்ளலாம். அவற்றையும், எழுத்துகளுக்கு மக்கள் அமைத்த செயற்கை வடிவங்களையும் ஒத்துப் பார்ப்பது இனிச் செய்ய வேண்டிய ஆராய்ச்சியாம்” என்று ஆய்வாளர் பொறுப்பையும் குறிக்கிறார் (37).

வேர்ச்சொல் வினைச் சொல்லாக இருத்தற் பாலது என்ற கொள்கை பொருந்துவதில்லை. அது பெயராகவும் இருத்தல் கூடும் என்றும், வேர்ச்சொல் ஓரசைச் சொல்லாகவும் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் சொல்லமைப்புப் பகுதியில் கூறுகிறார் கா.சு. (43-44). சொற்களைக் கடன் வாங்கும் பழக்கம் கம் உண்டாதலால் பிற மொழிக் கலப்பு மிகுதலையும் ஆங்கில மொழியில் அவ்வாறு பிறமொழிக் கலப்பு மிக்கிருத்தலையும் கூறுகிறார். சீன மொழி, ஆரிய மொழி,