உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

ஆப்பிரிக்க

இளங்குமரனார் தமிழ் வளம்

14

திராவிட மொழிகள் ஆகியவற்றின் சொல்லமைப்புகளை விரித்துரைக்கிறார். மொழிநூலை நன்கு ஆராய்வதற்கு உள நூல், உடல் நூல், இன நூல் என்பவையும் தொன்ம (புராண)க் கதை, கட்டுக்கதை, சமயக்கோட்பாடு என்பவையும் பயன்படுதலை எண்ண வைக்கிறார் கா. சு.

தமிழ்மொழி அமைப்பு என்னும் இரண்டாம் பகுதியில் இந்திய மொழிகளுட் பல, திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆரியக் குடும்பத்தைச் சேர்ந்தவையுள்ளும் பல மொழிகள் திராவிட இலக்கணப் போக்கைத் தழுவியுள்ளன. ஆதலால் இந்தியாவில் பெரும்பான்மையும் திராவிடச் சார்புடைய மொழிகளே பேசப்படுகின்றன என்னும் கருத்தைக் கூறும் கா. சு. இந்திய மக்களுட் பெரும்பான்மையோரும் திராவிட உடற் கூறு உடையவரே என்றும், திராவிடர்களே தென்னிந்தியாவின் பண்டை மக்கள்; அதற்கு மாறான கொள்கைக்குத் தக்க சான்றில்லை என்றும் விளக்குகின்றார்.

தமிழ் உயிரெழுத்துச் சொல், வடமொழியிலும், திராவிட மொழிகளிலும் திரிந்து வழங்கும் வகை, வல்லெழுத்து “மொழி முதல், மொழியிடை, மொழி இடை இரட்டித்தல்” என வருதலால் உண்டாகும் ஓசையமைதி வேர்ச்சொல், பெயர்ச்சொல், வேற்றுமை, இடப்பெயர், எண்கள் எச்சம் முதலியவற்றைப் பல்வேறு மொழிகளுடன் ஒப்பிட்டு விரிவாக ஆய்கின்றார்.

66

மொழியொப்புமை என்னும் நிறைவுப் பகுதியில் திராவிட மொழிகள் ஆரியத்திற்குத் தாயான மொழியுடன் ஒருவகைச் சம்பந்தமுடையதாகத் தோன்றுகிறது எனச் சுட்டுகிறார் கா. சு. ஒரு சொல் வடமொழியிலும் தென் மொழியிலும் காணப் பட்ட இடத்து அது தென்மொழிக்கு உரியதென்று சில காரணங்களால் துணியவேண்டும் என்று காரணங்களைக் கூறுகிறார்;-

1. வடமொழியில் அது தனிச் சொல்லாய்ப் பகுதியும், அதனின்று உளவாகும் கிளைச் சொற்களும் இல்லாதிருப்பத் தமிழில் அது பல கிளைச் சொற்களோடு பெரு வழக்கு உடையதாய் இருப்பின் அது தமிழில் இருந்து வடமொழிக்குச் சென்றதேயாம்.

2. ஒரு பொருளைக் குறிப்பதற்குத் தமிழில் வேறு சொல் இல்லாது ஒரு சொல்லே வழங்கவும் வடமொழியில் வேறு