உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

7

சொற்கள் அப்பொருளைக் குறிப்பதற்கு ஏற்பட்டிருந்தால், அச் சொல் தமிழ்ச் சொல் என்று ஊகிக்கலாம்.

L

3. ஒரு சொல் திராவிடத்திற் காணப்படுவதாய் ஆரிய மொழிகளில் சமற்கிருதந் தவிர பிறமொழிகளிற் காணப் படாததாய் இருக்குமாயின் அது திராவிடச் சொல் என்று துணியலாம்.

4. வடமொழியில் ஒரு சொல்லிற்குக் கூறும் தாது பொருட் பொருத்தமில்லாதிருந்தாலும், தமிழில் அதன் மூலம் பொருத்தமுள்ளதாய் இருந்தாலும் அச்சொல் தென் மொழிக்குரிய தென்றல் சாலும்.

5. ஒரு சொல்லின் பொருள் தமிழில் இயற்கையாயும் வடமொழியில் உருவகத்தால் இயைபுடையதாய் இருந்தால் அது தமிழ்ச்சொல் என்று கொள்ளலாம்.

6. சொல்லைப் பிரித்தறியும் தமிழ் இலக்கண நூலார், ஒரு சொல்லைத் தமிழ் என்றால், அது ஏற்றுக் கொள்ளற் பாலதே என்பவை அவை.

அடவி-அடர்ந்திருக்குங்காடு; அடர் என்ற சொல் எல்லாத் திராவிட மொழிகளிலும் காணப்படுவதே.

அம்பா என்ற சொல், அம்மா என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே. செருமனியில் ‘அம்மெ' என்ற சொல் செவிலித் தாயைக் குறிக்கும்.

கடுகு என்ற சொல் கடு (அதிகம்) என்பதன் அடியாகப் பிறந்து கார மிகுதியையுடைய பொருளைக் குறிப்பதாயிற்று. கடுகு (விரைந்து போ) கடி என்னும் சொற்களும் கடம், கடறு என்பனவும் அவ்வாறே வருவன.

கலா - கல் என்ற தமிழ்ச் சொல்லடியாகப் பிறந்த கலை என்பதன் திரிபே கலா என்றாயிற்று.

நானா

- நாலா என்ற தமிழ்ச் சொல்லடியாகப் பிறந்தது. வடமொழியில் அதற்குச் சரியான வேர்ச் சொல் இல்லை. நீரம் என்ற வடசொல் நீர் என்ற தமிழ்ச் சொல்லே. தெலுங்கில் அது நீளு எனப்படும். காண்டு மொழியில் நீர், ஈ என்பனவும் பிராகுயில் தீர் என்பதும் ஒன்றே.

பொன் - தமிழ்ச் சொல்லாகிய பொன் என்பதன் அடியாகப் பண்ணோ என்ற பிராகிருதச் சொல் பிறந்துள்ளது.