உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

இளங்குமரனார் தமிழ் வளம்

14

பாகம், பங்கு என்ற வடசொற்கள் பகு என்றத் தமிழ் சொல்லடியாய்ப் பிறந்தன.

சவம் என்பது சரா

-

இற, என்பதன் அடியாய்ப் பிறந்தது. சபாயெடிக் என்ற சித்திய மொழியில் சாவெ - இறந்த என்பது காணப்படுகிறது. அது வடமொழியிற் சவ் =போ, என்பதன் அடியாகப் பிறந்தது என்பது பொருந்தாது.

-

கர் நாட என்பது, கருநாடகம் கருத்த நிலப்பரப்பு என்பதனடி யாய்ப் பிறந்தது.

பலன் என்பது பழம் = பழுத்தது என்பதன் மரூஉவாம்.

பிடகம் = கூடை, என்பது பிடி என்பதனடியாகப் பிறந்தது. உருவம் என்பது உருட, உறு, உறுதியானது என்ற தமிழ்ச் சொல் அடியாகப் பிறந்தது.

இஞ்சி என்பதே சிரிங்கவோ என்ற வட சொல்லாயிற்று.

பூப்பது பூ. அது புஷ்பத்தினடியாகப் பிறந்ததன்று.

தீ

தீ என்ற சொல்லின் அடியாய் வடமொழித் தீபம் உண்டா யிருத்தல் கூடும்.

குழி என்பதன் வேரே குண்டு, குண்டம் என்பவற்றிற்கு மூலமாயிருத்தல் கூடும்.

இவ்வாறு வடமொழி,

தென்மொழிச் சொற்களை

ஆய்ந்து கூறும் கா. சு. உலகிலுள்ள பிறமொழிகளுக்கும் தமிழுக்குமுள்ள சொல்லொற்றுமை சிலவற்றையும் பட்டி யிட்டுக் காட்டுகிறார். அவற்றுள் சில:

நரம்பு = நெர்வ் (இலத்தீன்)

பல் = பல

-

பிளஸ் (இலத்தீன்)

=

முறுமுறு - மர்மர் (Murmur)

ஈறு - ஈறு (Year) (ஆங்கிலம்)

கொல் - கில் (Kill) (ஆங்கிலம்)

எல்லா -ஆல் (AII)

பூனை புஸ் (Puss)

பூசை - பூனை

கிண்டு - கெண்டியோ (கிரீக்)