உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

159

விடை கூறிவிடுவார் என்பது அவர் திறத்திற்குச் சான்று. ஆனால் அவர் எதிர்காலத்திற்கு வைத்து விட்டுப் போனது என்ன? குடியரசில் நம்பிக்கைக் குறைவும் தனித் தலைமையாகிய எதேச்சாதிகாரத்துக்குக் கண்மூடிச் சாய்தலுமேயாம்” என்கிறார்

66

கா. சு.

-

-

இராம்சே மாக்டனால்டு சௌதாம்டனில் இருமுறை தொழிற்கட்சி வேட்பாளராக முதல்வராக இருந்தவர் கூத்தாட்டு அவைக்குழாம் போலக் கூட்டம் கூட முழங்கியவர். அவர் தோற்றமும் அதற்கு உதவியது. அவர் குரல் உயிர்க்கு வாய்த்த மெய்ப் பொருள் தூதென விளங்கியது. ஆனால், இப்போது அரசு மேடையில் ஐயத்தோடும், சொல்லடுக்கோடும், விளங்காமலும் அதுபோய் விட்டது.நம்பிக்கையற்று, ஓசை நயமும் இன்றி, தூதின் மதிப்பும் போய்விட்டது என்கிறார் கா. சு.

“நான் மன்றத்தில் பேசுவதை இராம்சே ஒரு முறை கூடக் கேட்டதில்லை" எனக் கவலைப் பட்டார் ஓரமைச்சர். எதிர்க் கட்சியார் நண்பகல் 2.45க்கு தொடங்கி மறுநாள் 1.25 வரை கூட்டம் தொடர வைத்த போது நகரச் சோலையில் உலாவிய தாகவும் அங்கே குளிர் தட்டியதாகவும் அதனால் அங்கு வந்து விட்டுப் போவதாகவும் காலையில் சொல்லிப் போய் விட்டார். பிழைப்பதற்கு வகையின்றி இலண்டனுக்கு வந்து உழைப்பு ஊதியங் கொண்டு படித்துப் பள்ளி ஆசிரியராய், எழுத்தராய் இருந்த அவர் இப்பெருநிலை எய்தியும், தக்க வைத்துக் கொள்ளாமையோடு தொழிற் கட்சி அரசையுமே தொலைத்ததை விரிக்கிறார் கா. சு. "இராம்சே பெரிய மனிதரல்லர் எனினும் அவரிடத்தில் சில பரிய தன்மைகள் இருக்கின்றன. அவையில்லாமல் தொழிற்கட்சியை அரசோச்ச வைத்திருக்க முடியாது என நடுவுநிலைக் கண் கொண்டு குறிப்பிடுகிறார்.

·

1883 சூலை 29இல் பிறந்தவர் முசோலினி. தந்தை கொல்லர்; தாய் ஆசிரியர்; பேரரசரைச் சுட்டுக் கொன்ற மெக்சிகோ புரட்சியாளன் பெனிட்டோ. அவன் பெயரொடு பெனிட்டோ முசோலினி எனப் பெயர் பெற்றதற்கு ஏற்ற குணத்தோடு விளங்கியவர். இத்தாலிக்கு வழிவழியாகத் தொண்டு செய்த குடும்பத்தவர். படிக்கும்போது சமயப் பாடல்களை அவர் பள்ளியில் பாடுவதில்லை. மெழுகுவர்த்தி நாற்றமும் பேரிசைக் கருவி ஓசையும் அமைந்த வழிபாட்டுக்கு ஒவ்வாதெனக் கூறியவர் அவர். கரிபால்டி என்னும் வீரன் மேல் பற்றுக் கொண்டவர். ஆசிரியராய், எழுத்தராய், இதழ்