உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

158

தலைவர்

இளங்குமரனார் தமிழ் வளம் – 14

தாலின், இலெனினைப் பற்றி “தன்னல மாந்தரென்பார் கடலில் ஒரு துளியே; இலெனின், ஒரு முழுக் கடல்” என்றார். இது அவர்க்கும் பொருந்தும்” என்கிறார் கா.சு. ஒருழவர் அவரைப் பார்க்கப் போய் "அன்பான பெரிய தலைவரே' என்றார். தாலின், அவரைத் தடுத்துத் ‘தோழரே, பெரிய என்ற சொற்களை விட்டு நம் கடமையைப் பார்ப்போமே' என்றாராம். தமக்கும் உழைப்பாளர்க்கும் உரிய தொடர்பு உடலோடு உயிர்த் தொடர்பு. இலெனின் புரட்சியாளருடன் உழைத்தார். தாலின் நலிந்த உழைப்பாளருள் ஒருவராய் வந்து அவருடன் நின்று உழைத்தவர்; பதினைந்து வயதில் மார்க்கசு கொள்கை நாட்டத்தால், பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர்ப் போல்சுவியன் இயக்கச் சார்பால் பல்கால் சிறையுற்றார்; தப்பி ஓடினார்; இலெனினார் தலைக்கு விலை வைத்த போது, அவரைத் தலை மறைந்து செல்ல வைத்துத் தாம் இயக்கப் பணியை நடத்தினார். இராணுவப் பணியையும், புரட்சிப் பணியையும் ஒப்பிட்டு ஆயும் அவர், ராணுவத் தலைவர் தயார் செய்த படைகளோடு போருக்குப் போகின்றார். ஆனால், அரசியல் தலைவர் கட்சிச் சண்டை நடக்கும் போது மக்களைச் சேர்க்க வேண்டியதாக இருக்கிறது. கட்சிக் கொள்கையின் நன்மையை உணர்ந்தே மக்கள் கட்சியில் சேர்கின்றனர்." இலெனினார் மறைந்த ஐந்தாம் நாள், சோவியத்து மாநாட்டில், “தோழர் இலெனின் நிலை நாட்டிய கட்சியின் உறுப்பினர் என்னும் பட்டத்தைப் பார்க்கிலும் உயர் பட்டம் உலகில் இல்லை” என்றார்.

66

தாலின், இலெனின் வேலையைத் தொடர்ந்து செய்தவர் மட்டுமல்லர். சமுதாயக் கட்சித் திட்டத்தில் பெண்களுக்குத் தக்க இடங் கொடுத்தவர் இவரே. இவரைப் போலப் பொறுமையும் வீரமும், திறமும் ஒருவரிடத்திலும் அமைதல் அரிது. உருசியப் புரட்சி ஊக்கமும் அமெரிக்கச் செயல் திறனும் ஒன்று சேர்வதே வேலை - முறையின் இலக்கணம் என்பது இவர் கொள்கை என்கிறார். கா. சு.

ம்

டேவிட்டு லாயிட்டு சியார்சு, தம் கால உலகப் பெரு மக்கள் அறுவருள் ஒருவர். அவர் பிரித்தானியர்; நிலத்தை அகழும் ஒரு நாயின் பல நிலை முழுத் தோற்றங் கொண்டு அவரை நகையாடற் படம் போட்டார் ஓர் ஓவியர். அப்படம் பார்ப்பவர் உணர்வில் பல காட்சிகளை ள அவ்வப்போது உண்டாக்குவது. அவரிடம் ஒன்றை வினவ ஒருவர் கருதும் கருத்து மனத்தினின்று வாய்க்கு வருமுன், அதை உணர்ந்து