உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.’ கலைக்களஞ்சியம்

157

பெற்றிருப்பதே என்றால், இந்தத் தலைமுறையில் தெளிவாக மிகுந்த நாகரிகமமைந்த ஆங்கிலர் எல்லிசு என்பவரே என்கின்றனர்.

குற்றவாளி என்பது எல்லிசு 1889 இல் வெளியிட்ட நூல். அதனை விற்றவன் மேலேயே குற்ற வழக்குத் தொடுக்கப் பட்டது. குற்றம் என்பதை விளக்குகிறார் எல்லிசு: குற்றம் என்பது ஒருவன் சமுதாய நிலை தொடர்பாகவும் அவன் வாழ்கின்ற இடம் காலம் தொடர்பாகவும் ஏற்படுகின்ற ஒருவகை ஒழுக்கக் குறைவு. இடம் பற்றியும் காலம்பற்றியும் ஒருவனைக் கொல்லுதல் பெருநலம் என்றும் பெருங் குற்றம் என்றும் பேச இடமுண்டு. ஐரோப்பாவில் முற்கால நாகரிகப்படி இன்ப விளையாட்டு என்று ட்டு என்று கருதப்பட் பழக்கங்கள் இப்போது வட ஐரோப்பாவில் இயற்கைக்கு மாறான ஒழுக்கத் தவறுகள் என்று கண்டுபிடிக்கப் படுகின்றன என்கிறார்.

1894 இல் எழுதிய ஆண் மக்களும் பெண் மக்களும் என்னும் நூலில் ஆண், ஆற்றலுக்குக் காரணமாகிறது. பெண் முட்டைக்குக் காரணமாகிறது என்பதே வேறுபாடு என்கிறார். சில உறுப்பு வேறுகளும் உண்டு. அவை கொம்பு, தோகை என்பனவும் புணர்ச்சிச் சார்பான நடத்தைகளும் (நடனம் ஒலி) என்கிறார். உடலமைப்பு வேறுபாட்டையும் சுட்டுகிறார்.

காதற் செயல் மாற்றங்கள் என்னும் நூலை விளக்கும் கா.சு., கா. சு., அறிவுநூல் ஒன்றின் முக்கிய அடையாளம், செயல் முறைக்கு வழிகாட்டும் விளக்கங்களை எவ்வளவுக்கு அளிக்கும் என்பதே என்கிறார். 19 ஆம் நூற்றாண் போக்குகளைக் கூறும் கா. சு., கொடுமை தவறான நம்பிக்கை என்பன நீக்கக் கூடியன என அறிந்தாலும் மனித இயற்கையில் ஆழமாய்ப் பதிந்தவை என்பதை அறியவில்லை. கொடுமையை நீக்கினாலும் அதற்குப் பதிலாக ஊக்கமுண்டாக்கும் காட்சிகளைச் சீர்திருத்தக்காரர் ஏற்படுத்தவில்லை. தனியே இருக்கலாம் என்று உரிமையில் பேசினாலும், தனிமைத் துயரை நீக்கும் வழி கண்டு பிடிக்கவில்லை. அதனால் நாகரிகமே மக்களுக்குப் பகையாகத் தோன்றிற்று என்கிறார். என்கிறார். மருத்துவராகவும் அறிவியல் எழுத்தாளராகவும் விளங்கிய அவர் மறைந்த இரண்டாம் திங்களிலே அவரைப் பற்றிய வரலாற்றை எழுதினார் கா. சு. (1939).

L