உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

இளங்குமரனார் தமிழ் வளம் 14

தலைவர் அரியரெனப் பாராட்டுகிறார் கா. சு. தம் மக்களின் தந்தையாகவும் மேய்ப்பராகவும் அரசியல் துறையில் வாழ முயன்றார் என்று மேலும் கூறுகிறார்.

1913 இல் ஐரிசு தொண்டர் படையில் சேர்ந்து சிறிய படைத்தலைவரானார். “அனைவரும் திவாலராவாக இருந்தால் ஐரிசுக் கலகம் மும்மடங்கு காலம் நீடித்திருக்கும்” என ஆங்கிலப் படைத் தலைவர் ஒருவர் 1916 இல் கூறினார். உறங்கிக் கிடந்த மக்களை விழிப்புறுத்தவே அவர் உழைப்புப் பயன்பட்டது. அவர் அமெரிக்கக் குடியுரிமை யுடையவராக இருந்ததால் தூக்குத் தண்டனை தரப்பட்டும், நிறைவேற்றலின்றி, வாழ்நாள் உழைப்புத் தண்டனை விதிக்கப்பட்டார். தம் அறையில் இருந்து சமய நூல் ஒன்றைப் படித்துக் கொண்டிருக்கும்போது இத்தண்டனைச் செய்திகள் வந்தன. இவற்றைக் கேட்டுக் கொண்டு மேலும் தொடர்ந்து படித்தார்.

மக்களுக்கு விடுதலை உணர்வு வலுத்தது. திவாலரா விடுதலை பெற்றார். 1917 இல் சட்டமன்ற உறுப்பினரானார். 1918 இல் மீண்டும் சிறைப் பட்டார். சிறையில் இருந்து தப்பினார். 1921 இல் அவரே தலைவரென மக்களால் எண்ணப்பட்டார். 1932 இல் அவர் புதுக் கட்சி ஆட்சிக்கு வந்தது. சில நாட்களுக்கு முன் அவர் மேல் ஐயப்பாடு சிலர்க்குத் தோன்றியுள்ளது இவற்றையெல்லாம் கூறும் கா. சு. “முடிவில் தோற்றாலும் வென்றாலும் இருள்மிக்க காலங்களில் தம் மக்களை ஊக்கிக் காத்த தந்தையாகத் திவாலரா எண்ணப்படுவார்” என்கிறார்.

காவெலாக் எல்லிசு ஆங்கிலர்; மாந்தநூல் அறிஞர்; அவர் எடுத்துக் கொண்ட ஆய்வு எந்தப் பல்கலைக் கழகப் பாடத்தும் இல்லை என்பதைக் குறிக்கும் கா. சு, “புது அறிவு நூல்கள் பல்கலைக் கழகங்களில் தொட்டில் இட்டு வளர்க் கப்படுகின்றன. அவை அங்கே பிறப்பதில்லை” என்கிறார்.

"அயல்நாட்டு மக்களை மாக்கள் என்று கருதுவது ஆங்கில நாட்டினர் இயல்பு. நாகரிகமானவர் அவர் கருதுகின்ற நாகரிகமானவர், வடிவமாகவே அவர் இருத்தல் வேண்டும்” என்கிறார். எல்லிசைப்பற்றி ஆங்கிலர், “கழிவுப் பொருள்களைப் பற்றி நன்றாகப் பேசுவார்” என மதிப்பிடுகின்றனர். ஆனால் அமெரிக்கர், “ஒரு மனிதனுடைய சொந்த நற்பயிற்சிக்கு தக்க அடையாளம், பொது மக்கள் மனத்திலுள்ள அற்பக் கருத்துக் களினின்றும், குழந்தை உணர்ச்சிகளினின்றும் விடுதலை