உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா. சு. வின் தனித்திறம்

ன்

கடந்த இருபத்தொரு பொழிவுகளின் அடிப்படைத் திறமாக அமைந்த செய்திகளும். கா. சு வின் வரலாற்றுக் குறிப்பும் தழுவியது இஃதாகும். தனி என்பது, ஒன்று என்பது ஒப்பற்ற என்னும் பொருளும், தரும் சொல். இவண். பிறர்க்கு வாய்த்தற்கரிய ஒப்பற்ற திறங்கள் பல, “கா. சு.’ வுக்கு அமைந்து ஓங்கிய சிறப்பைக் குறிப்பதாக நின்றது.

66

கா. சு. செந்தமிழும் சந்தனமும் திசையெல்லாம் பரிமளிக்க மந்தவளி யுமிழ்மலய வளர்குடுமி நின்றிழிந்து, கொந்தவிழும் மலர்வீசிக் குளிர்கெழு முத் தெடுத்திறைத்து, முந்தவெழு புனற்பொருளை முழுவளத்த தன்னாடாம் தென்பாண்டி நெல்லையிலே பிறந்தமை ஓர் இயற்கை நற்சூழலாயிற்று.

தாளாண்மையிற் சிறந்த தமிழ் வேளாண் குடிப்பிறப்பும், சைவத் திருக்கோயில் சார்பும், அச்சார்பிலே அழுந்தி நின்ற காந்திமதிநாதர் மைந்தராகப் பிறக்கும் பேறும் இயல்பாக நேர்ந்த இனிய வாய்ப்பாயின.

குழவிப் பருவத்தே, அறிவறிந்த இறைமைசால் தவத் தந்தையாரிடத்தே நிகண்டும் ஆங்கிலமும் பிறவும் கற்கும் பேறு வாய்த்தது. ஒருமுறை கற்றதை மீளக் கற்கவும், கேட்கவும் வேண்டாவாறு பச்சை மரத்தாணியினும் பதித்துக் கொள்ளவும், கல்லில் எழுதிய எழுத்தென நிலைத்து நிற்க வைக்கவும், கணினியன்ன மூளைக் கூர்ப்பு இயற்கை வழங்கிய இணையற்ற கொடையாய் இலங்குவதாயிற்று. வாட்டமின்றி வாழத் தக்க வளச் சூழல் தந்தைக்கு இருந்ததும், தந்தையே தாயுமானவராகவும், கா. சு. வின் ஏழாம் அகவையிலேயே நேருமாறு நேர்ந்த நேர்ச்சியும், கற்றறி தந்தை, மற்றை அனைத்தும் தம் மைந்தரே வாழ்வும் வளமுமெனக் கொண்டு வாழ்ந்த வாழ்வும், அதற்கென அதுகாறும் பார்த்துக் கொண்டிருந்த அரசுப்பணியையும் டுத்தமையும் பிறர்க்கு வாய்த்தல் அரியன. இவ்வியற்கையும் இவ்வருமையும் கா. சு. வின். தனித்திறத்திற்கு அடிக்கால்களாக அமைந்தனவாகலின் சுட்டப் பட்டனவாம்.