உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

இளங்குமரனார் தமிழ் வளம்

14

கா. சு. விற்கு ஆறாம் ஆண்டு எட்டாம் திங்கள்; தாய் மறைந்தார்; தந்தையும்,தாயைப் பெற்ற பாட்டியும் கலங்கினர்; கண்ணீர் வடித்தனர். அவர்களின் ஆறாத் துயரம் கண்ட கா. சு., தந்தையார் தமக்குக் கற்பித்த “ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரா மாநிலத்தீர்; - வேண்டா; நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும் எமக்கென் னென்றிட்டுண் டிரும்” என்னும் ஒளவைப் பாட்டியின் அருமைப் பாட்டை எடுத்துரைத்துத் தேற்றினார் என்றால், ஏழு அகவைக் குழந்தையிடத்து எங்கும் கேட்கும் செய்தியோ? தந்தைக்கும் அறிவுறுத்தும் மைந்தர் திறம் “தம்மிற்றம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இனிது” என்று அமையும் எதிர்கால அமைப்பின் சுடரும், மெய்ப்பொருள் உணர்ச்சி மேம்படு மைந்தன் இவனென ஒளிவிட்டுக் காட்டிய காட்சியுமாம்.

அந்நாளில் அரசின் மாநிலப் பொதுத் தேர்வாக நிகழ்ந்த நான்காம் வகுப்புத் தேர்வாகிய தொடக்கத் தேர்விலும் (Primary Examination) ஏழாம் வகுப்புத்தேர்வாகிய நடுத்தர தேர்விலும் (Lower secondary Examination) மாநில முதல்வராகத் தேறினார். அதனால் பின்னர் பயின்ற எவ்வகுப்புக்கும் பள்ளிச் சம்பளம் கட்ட வேண்டும் நிலை இல்லாதாயிற்று! வகுப்பு முதன்மை, பள்ளி முதன்மை, வட்ட, மாவட்ட முதன்மை எட்டுவாரும், மாநில முதன்மை பெறுதல் அருமையேயன்றோ! கா. சு. வின் தனித்திறங்களுள் ஈதொன்று!

பள்ளியிறுதித் தேர்வு அந்நாளில் ‘Matriculation Examination' என்னும் பெயரால் பல்கலைக் கழகத்தால் நடாத் தப்பட்டது. திருவருள் ஒருபாடம் புகட்டிக் கல்வித் திறத்தில் மேலும் அழுந்துவிக்க எண்ணியதோ! அன்றிப், பாலரும் அன்றி வளர்ந்த வரும் அன்றி அமைந்த இரண்டுங்கெட்டாராம் பருவநிலை ஆட்டங் காட்டி அறிவுறுத்தத் தொடங்கியதோ! அறிய வாய்ப்பு இல்லை! கா. சு. பள்ளியிறுதித் தேர்வில் தோல்வி கண்டார்! ஆம்! மாநில முதன்மை மண்டியிட்டது! மறுபடி வீறியது. இடைநிலைத் தேர்வென்னும் F. A தேர்விலும் இளங்கலை என்னும் B. A. தேர்விலும் மாநில முதன்மை பெற்றார். அவ்வாறே ஆங்கிலத்தில் முன்னரும் (1913) தமிழில் பின்னரும் (1914) கலை முதியரின் முதன்மையரானார். மெய்ப் பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற அடுத்த ஆண்டு முயல, இரண்டு முதுகலைப் பட்டத்திற்கு மேல் மூன்றாம் முதுகலைப் பட்டம் பெற சட்டம் இடம் தராமையால் சட்டத் துறைப்