உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

171

ஆயிரம் பக்கங்களுக்கு மேற்பட்ட நூல்களையும் ஒரே நாள் இரவில் ஆய்ந்து, அதில் உள்ள சொற்றொடர்களைக் க் கூறுவதுடன் அதன் பக்கத்தையும் நினைவில் இருந்து சொல்லுதல் கா. சு. வுக்குக் கைவந்த கலை என்பதைக் குற்றங்களின் உட்கிடை என்னும் நூலை அவர் சொல்லச் சொல்ல எழுதிய வழக்கறிஞர் தூத்துக்குடிஇ. வெண்ணி மாலை என்பார் “நான் தவறின்மைக்காக அவ்வந் நூலைத் திருப்பிப் புரட்டிக் கொண்டிருப்பேன். உடனே அவர்கள் 'ஐயம் வந்துவிட்டதா உனக்கு? நான் சொல்லிய பக்கத்தில், தலைப்பில் இருந்து, இத்தனை வரிகளுக்கு அப்பால் பார்" என்பார் என்கிறார். இது து கா. சு.வின். நினைவுக்

66

கொழுமையின் இணையின்மைச் சான்று.

தொல்காப்பியத்தை ஆங்கிலப்படுத்த வல்லார் கா. சு. என அந்நாள் பரோடா மன்னரின் அமைச்சர் மாதவையா என்பார் தெளிந்து கொண்டிருந்தார் என்னும் செய்தியை அறியின் நாடறிந்த நல்லாங்கிலப் பேரறிஞர் என்பது விளக்கமாகும்.

ஒருவரே ஒரு மாதிகையை நடாத்துதல்

அதுவும் இலக்கியம், இலக்கணம், வரலாறு, அறிவியல், உடலியல், உளவியல், வானியல், மருந்தியல், ஆங்கில ஆக்கம், ஆங்கிலப் பெயர்ப்பு, சட்ட இயல், இன்னவெல்லாம் ஒருவரே எழுதிய அருமை வெள்ளிடை வள்ளிடைமலையெனக் கா.சு.வின் பல்கலைப்

புலமையைப் பளிச்சிட்டுக் காட்ட வல்லது.

திருக்குறள் பொழிப்புரை, தனிப்பாடல் திரட்டு உரை என்பனவும், ‘பொதுமறை’ என்னும் ஆய்வும், பற்பல நூல் களுக்கு எழுதிய மதிப்புரைகளும், அவ்வப்போது பாடிய பாடல் களும், இசைப்பாடல்களும், இன்னவும் இவர் தம் பல திறங் காட்டும் பான்மைய.

எதிரிடைக்

சமய அழுத்தம் மிக்க துறவோரும், திருமடத்தினரும் பாராட்டவும், அவற்றுக்கு கொள்கையும் சீர்திருத்த நோக்கும் உடையரும் பாராட்டவும் இருநிலைப் பாராட்டும் ஒரு நிலையே எய்தத் திகழ்தல் கா. சு. வைப் போல் வாய்த்தல் அருமையேயாம்.

சமயங்கடந்த உரிமையன்பு, சாதி கருதாச் சால்பு, ஒல்லும் வகையாலெல்லாம் உதவுதல், எளிமையில் இன்பங் காணல், தொல்லை எத்துணைத்தாயினும், தொண்டில் தலைப்பட்டு நிற்றல், ‘எந்நிலையில் நின்றாலும் எவ்வேடம் கொண்டாலும், மன்னியசீர் சங்கரன் தாள் மறவாமை, இன்னவெல்லாம் அமைந்த கா. சு. வின் திறம் விரிக்க விரிவது;