உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

>இளங்குமரனார் தமிழ் வளம் – 14

நூலாசிரிய நிலையில் அருளிய நூல்கள் வரிசையில் வரலாற்று நூல்கள் முதன்மையன. இவர் இயற்றிய தமிழ் இலக்கிய வரலாறு தாய் வரலாறு! அது பெற்றெடுத்ததும், வளர்த்ததுமாம் வரலாறுகள் எண்ணற்றன. ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மணிவாசகர், சேக்கிழார், மெய்கண்டார், பட்டினத்தார், தாயுமானவர், குமரகுருபரர், சிவஞான முனிவர் வரலாறுகளும் அவர்கள் அருளிய திருப்பாடல் ஆய்வுகளும் தனித்தனி வகையில் சிறந்தன. ஆய்வு முறைக்கு வழி காட்டி களாய் அமைவன. உலகப் பெரு மக்கள் வரலாறு என இரண்டு பாகங்கள் வரைந்தமையும் கருதத் தக்கது. அவையும் வாழ்ந்து கொண்டிருந்த மக்களைப் பற்றியது என்பது தனிச் சிறப்பாகும்.

ஆய்வு நூல்களாக அறிவு விளக்க வாசகம், திருஞான சம்பந்தர், தேவார இயற்கைப் பொருளழகு, இறையனார் அகப்பொருள், பழந்தமிழர் நாகரிகம், மொழிநூற் கொள்கையும் தமிழ்மொழியமைப்பும் என்பன. கதை நூல், செகப்பிரியர் வரலாறும் நாடகக் கதைகளும் என்பது. இந்து சமயங்களின் சுருக்க வரலாறு திருநான்மறை விளக்கம், சைவ சித்தாந்த விளக்கச் சுருக்கம், சைவ சித்தாந்த உண்மை வரலாறு, முருகன் பெருமை, சைவச் சடங்கு விளக்கம், மெய்கண்ட நூல்களின் உரைநடை, தமிழர் சமயம், சிவஞானபோதப் பொழிப்புரை என்பன சமய நூல்கள்.

தியானமும் வாழ்க்கை உயர்வும், கடவுளும் வாழ்க்கை நலமும், உலக நன்மையே ஒருவன் வாழ்வு, மக்கள் வாழ்க்கைத் தத்துவம், வாழ்க்கை இன்பம் என்பன அறிவுச் சுடர் நூல்கள். உடல்நூல், நோய் நீக்கம், வானநூல் என்பன கலை நல நூல்கள்.

சிவப்பிரகாசம், நீதிநெறி விளக்கம் என்பனவும் புற நானூற்றுப் பாடல்கள் சிலவும் இவர் ஆங்கில ஆக்கம் செய்த நூல்கள். சைவ சித்தாந்தத்தின் இயற்கைத் தத்துவம் ', இந்து சமயங்களின் சுருக்க வரலாறு?, இந்து அற நிலையச் சட்டத் தொகுப்பின் மேல் ஒரு குறிப்பு, தமிழ் மலர்கள்" என்பன இவரியற்றிய ஆங்கில நூல்கள். இவற்றுள் இந்து சமயங் களின் சுருக்க வரலாறு, ஒரே நாள் இரவில் எழுதி முடிக்கப் பட்டதாகும்.

குற்றங்களின் உட்கிடை5, இந்தியத் தண்டனைத் தொகுதி விரிவுரைகள் என்பன ஆங்கிலத்தில் வரைந்த சட்ட நூல்கள்.