உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

47

மாறுதல்களால் பெண்ணாகவும் உருவெடுக்கின்றன” என்று உயிர் நூலார் கூறுகின்றனர். பனையானது குலை ஒன்றும் ஈனாதபோது ஆண் என்றும், குலை ஈன்ற இடத்துப் பெண் என்றும் கூறப்படும் சில மருத்துவ முறைகளால் மலடு நீங்கி மகவுண்டாதல் போலப் பனையானது வளமற்ற நோய் நிலை மாறி வளமுள்ள நன்னிலை அடைதலே ஆணாய் இருந்து பெண்ணான வாறாகும் எனக் கொள்ள என்க என்கிறார்.

66

திருக்காளத்தியில் கண்ணப்பர் திருவவைக் கண்டு சம்பந்தர் கும்பிட்ட பயன் காண்பார் போல் பலமுறையும் பணிந்தெழுந்தமை கூறி வியக்கும் கா. சு. அன்பே யாவற்றினும் மேம்பட்டது என்றும், அடியாரது பேரன்பிற்கு ஈடுபட்டுத் தாழ்ந்திறைஞ்சும் நமது பரமாசாரியரது தற்போதமற்ற உயர் நிலை இதனால் இனிது விளங்கும் என்றும் கூறுகிறார். (240-1) ஞானசம்பந்தர் தம் பெற்றோர் கருத்துப்படி திருமணம் செய்தற்கு ஏற்றுக் கொண்டது, இல்லறம் உலகத்தார்க்கு உரியதே என்று காட்டக் கருதினமையாற் போலும்” என்கிறார் கா. சு. அவ்விசைவும், இல்லற வாழ்க்கையை ஒருகணமேனும் உலக முறைப்படி நிகழ்த்தும் விதி தமக்கு இன்மையே முன் உணர்ந்தே அதற்கு இசைந்தனர் போலும் என்றும் கூறுகிறார். அவர்தம் திருமணக் காட்சியானது அன்பர் பலர்க்கும் சிவ பெருமானது திருமணக் காட்சி போலப் பாச நீக்கமும் சிவப் பேறும் தருவதாயிற்று என்றும், திருஞானசம்பந்தர் சமய வேந்தர் என்பதை வலியுறுத்துவான் அவர்க்கு மாத்திரமின்றி அவரது திருமணத்தில் வந்த யாவர்க்கும் இறைவர் வீட்டின்பத்தை நல்குவராயினர் என்றும் குறிப்பிடுகிறார்.

நமசிவய என்னும் தமிழ் மந்திரப் பொருள் இன்னது எனவும் குறிப்பிடுகிறார்; நகரம் உயிர்களை உலக வாழ்க்கையிற் செலுத்தும் மறைப்புச்சக்தி, மகரம் உலகப் பற்றிற்கு மூலமாகிய ஆணவ மலமென்னும் அறியாமை. சிவமாகிய சிகரம் கடவுளைக் குறிக்கும். வகரம் உயிர்களைக் கடவுள்பால் செலுத்தும் திருவருட் சக்தியைக் குறிக்கும். யகரம் உயிரைக் குறிக்கும். இவ்வாறு பொருள் கூறுதலே தமிழ் மக்கள் முறை என்கிறார் (260).

திருஞானசம்பந்தர் தேவார ஆராய்ச்சி என்னும் பகுதியில் உருவகம், உவமை, ஒலிநயம், திணைவளம், தத்துவப் பகுதி எனப் பகுத்து சான்று காட்டி விளக்குகிறார். திருஞானசம்பந்தர் காலம் 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என முடிவு செய்கின்றார்.

-