உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

இளங்குமரனார் தமிழ் வளம் – 14

முனிவையும் உண்டாக்கியது என்பதை விளக்கும் கா. சு. அன்பு வைக்கப்பட்டவர்க்குத் துன்பம் நேரிடுவதாய் இருந்தால், அன்பு வைப்பாற்கு அத்துன்பம் நேரிடக் கூடாது என்ற கவலையும் அச்சமும் விளைதல் இயல்பு. தீ ஒழுக்கத்தைக் கண்ட பொழுது ஞானிகள் சினங் கொள்ளுதல் இயல்பே. சிவனடியார் மாட்டு ஞானசம்பந்தப் பெருமான் பேரன்புடையர் ஆதலினாலும், சமணரது பாதகத் தாழிலைக் கண் வுடன் ன் அதனை வெறுத்தவராதலானும் ‘அச்ச முன்புறப் பின்பு முனிவுற என்றபடி அவர் அச்சமும் சினமும் உடையவரானார். பிறரது நன்மையின் பொருட்டே இவை அவர் பால் நிகழ்ந்தன. அவர்கள் பால் உளதாய குற்றத்திற்கு அரசன் காரணன் ஆதலால் அரசனுக்கு வெப்பு நோய் வரும் படி பணித்தனர். ங்ஙனம் செய்தது அரசன் மேற் கொண்ட கோபத்தினாலன்று; அரசனை நன் னெறிப்படுத்தி உய்விக்க வேண்டுமென்ற கருணையினாலேயே என்கிறார் (172-3).

கா.சு.

சமணர் கொண்ட கழுவேற்றத்தைக் கூறிய கா. சு. அத்தண்டம் பற்றி ஞானசம்பந்தர் ஆய்ந்து தடுத்திருத்தல் வேண்டாவோ என்று கூறுவார்க்கு அமைதி கூறுவார் போலக் கூறுகிறார்.

கழுவேறுதல் கொடிய முறையோ, நன்முறையோ என்ற ஆராய்ச்சியைத் திருஞான சம்பந்தர் மேற்கொள்ளவில்லை. அத்தகைய அரசியல் முறைகளை ஆய்தற்கு எப்பொழுதும் பரமேபார்த்திருக்கும் பேரன்பர் தமது கருத்தினைச் செலுத்த மாட்டார். திருஞான சம்பந்தப் பெருமான் அரசியல் முறையை உலகத்திற்குப் போதிக்க வரவில்லை. பிற நாட்டிலும் சமயத் தலைவர்கள் அரசாங்கச் செய்திகளிற் றமது கவனத்தைச் செலுத்தவில்லை என்பது தெளிவு என்கிறார் (198-9).

இராமன் இராவணனைக் கொன்ற பாவம் நீக்க வேண்டிச் சிவபெருமானை இராமேச்சுரத்தில் வழிபட்ட செய்தியால், போரில் நிகழ்ந்த கொலையும் பாதகமாம் என்பதும், தற்காப்பின் பொருட்டுச் செய்த கொலைப் பாவம் நீங்கச் சிவபெருமானை வழிபடுதல் இன்றியமையாததென்பதும் அக்காலத்திலேயே கருதப்பட்டன என்று அறிகின்றோம் என்கிறார்

(201).

திருவோத்தூரில் சம்பந்தர் நினைத்த அளவான் ஆண்பனை, பெண்பனை ஆயதைக் குறிப்பிடும் ஆசிரியர், “ஆணிற்கும் பெண்ணிற்கும் கருவின் முறை ஒன்றே என்றும், கருவொன்றே சிலவகையான மாறுதல்களால் ஆணாகவும், வேறுவித