உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் 'கா.சு.’ கலைக்களஞ்சியம்

45

சம்பந்தரின் சிவிகை தாங்குவார்களுள் ஒருவராகத் தாமும் அதைத் தாங்கியமை சம்பந்தர் திருக்கூட்டத்தாருள் தம்மையும் ஒருவராகவே அப்பரடிகள் கருதினார் என்றும் கூறுகிறார். (122)

திருஞான சம்பந்தருக்கு வாசு தீராக் காசினையும், அப்ப மூர்த்திக்கு வாசு தீர்ந்த காசினையும் இறைவர் நல்கியது, திருநாவுக்கரசர் பாடற்றொண்டும் உழவாரத் தொண்டுமாகிய இருவகைத் தொண்டு நடத்தியமையாலும், அவரது முன்னை நல்வினைப் பயனுக்கேற்ப நற்காசு பெறும்பான்மை இருந்தமை யாலும் என்க. சிவஞானம் பெற்ற பிறகும் முன்னை வினைப்பயன் வந்தடைதலின் அதற்குத் தக்கவாறு பொருள்களைப் பெறுதல் நிகழும். அதனால் சிவஞானிகட்குத் தம்மளவில் யாதொரு குறைவுமில்லை. பொற்றாளம் முத்துச் சிவிகை முதலியன ஆளுடை ய L பிள்ளையார்க்கு அமைந்தன போல, போல, அப்ப மூர்த்திக்கு அமையாமையும் அவரவர் முன்னை வினைப் பயன்களுக்குள்ள இடையீடு பற்றியே என்க என்கிறார்.

க்

திருமறைக் காட்டில் அப்பரடிகள் ஒரு முழுப்பதிகம் பாட கதவு திறந்தமையும், ஞானசம்பந்தர் பாடிய முதற் பாட்டளவிலே கதவு மூடிக்கொண்டமையும் பற்றி, இருவர் தம் பத்தித் திறம் குறித்து இடையீடு பட்டு மொழிவார் உளர். அதனைக் கருதும்

கா. சு.,

66

அப்பமூர்த்திகள் பாடிய அளவில் திருக்கதவங்கள் திறப்பது திண்ணமே யாயினும், திறக்கும் பேறு பெறுதற்குத் தமக்குத் தகுதியுண்டோ, இன்றோ என்னும் ஐயப்பாடு அந் நாயனார் திருவுள்ளத்தில் நிகழ்ந்திருத்தல் கூடும். அவ்வையப் பாடு அத்துவிதக்கலப்பிற்குச் சிறிது இடையூறாதல் பற்றி அதனை நீக்கக்கருதும் பிரானார் கதவந் திறக்கச் சிறிது காலந் தாழ்த்ததும் ஒரு திருவிளையாட்டே எனக் கொள்க. பின்,

ரக்கமொன்றிலீர் சரக்க விக்கதவந் திறப்பிம்மினே' என்றருளியதும் தற்போதம் காரணமாக எழுந்த ஐயப்பாடு ஒழிந்து அத்துவித உணர்ச்சியால் வரும் உறுதியைத் தலைப்பட்ட நிலையாம் என்க, என்கிறார். மேலும் சைவச் செந்நெறிக்கு இரு கண் போன்ற சிவஞானிகள் இருவர்க்கும் பேதந் தெரித்தல், சிவத்திற்கும் சத்திக்கும் பேதம் பாராட்டுதல் போலாம் என்றும் கூறுகிறார் (129).

மதுரையில் ஞானசம்பந்தர் தங்கிய மடத்தில் சமணர்களால் தீ வைக்கப்பட்டது அவர்க்கு முதற்கண் அச்சத்தையும் பின்பு