உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

இளங்குமரனார் தமிழ் வளம் – 14

திருநீலகண்ட யாழ்ப்பாணரை ஞானசம்பந்தர் “ஐயர் நீர்" என்று விளித்துக் கூறுவதைக் கூறும் கா. சு. “அக் காலத்திலே எம்மரபினராய் இருப்பினும் விருந்தினராய் வந்தவரை ஐயரென்று உபசரித்தழைப்பது வழக்கம் போலும்" என்கிறார்.

(74).

திருஞானசம்பந்தப் பெருமானுக்கு உபநயனச் சடங்கு இன்றியமையாமை இல்லை எனினும், தங்கள் சமய வழக்கங்களைக் கைவிடாத திண்மையுடைய மறையவர்கள் இறைவனது திருவருள் பெற்ற பெரியார்க்கும் உலகியலின் படி உபநயனம் செய்வித்தனர் என்கிறார்(86).

கொடிமாடச் செங்குன்றூரில் தம்மொடு வந்தார்க்கு நேர்ந்த குளிர் நோயைப் போக்குதற்குச் சம்பந்தர் ‘நீல கண்டப் பதிகம்' பாடியதைச் சுட்டும் கா. சு., ‘அக்குளிர் சுரநோய் நச்சுத் தன்மை யுடையதாய், நோய் கண்டவரைக் கொல்லும் தன்மை யுடைத்து என்று ஊகிக்கப்படும்” என்கிறார். இன்றும் அத் திருப்பதிகத்தை ஓதுவார் விட நோயால் வந்த இடர் நீங்கி ன்புறுவர் என்பது அறியற்பாற்று என்றும் உறுதி கூறுகிறார்.

நீலகண்ட யாழ்ப்பாணர் "மாதம் மடப்பிடி” என்னும் பதிகத்தை யாழிலிட்டு இசைக்க முடியாத நிலையில் அவ் வியாழை முறிக்க முயல, “ஐயர், நீர் யாழிதனை முறிக்குமது என்?” என வினவி நிறுத்திய ஞானசம்பந்தர் பெருந்தகைமையைச் சுட்டும் கா. சு, "தேவாரத் திருப்பாடல்களின் இசைவளம், எல்லையற்ற தென்பதனை யாவரும் உய்த்துணரக் கடவர். நன்னீர்ப் பேராற்றிலுள்ள புனல் முழுவதையும் ஒரு பாத்திரத்திலே மக்களால் அடக்க முடியாதாயினும், தத்தமக்கு வேண்டிய அளவு தத்தமது கலங்களிலே எடுத்துப் பயன் துய்த்தல் உலக வழக்கிற் காணப்படுமாறு போலத் திருப்பதிக இசையினையும் தத்தமதறிவிற்கேற்பத், தத்தம் இசைக் கருவியில் மக்கள் அமைத்துப் பாடுதல் பொருத்தமுடையதென்பதே நமது பரமாசிரியருடைய திருவுள்ளக் கருத்தென்பது விளங்கும்

என்கிறார்.

சம்பந்தருக்கு முன்னே, திருக்கோயில்களுக்கு அப்பர் அடிகள் சென்று கடனாற்றியமை, சம்பந்தர் வரவினைத் தெரிவித்து அவருக்கு வேண்டிய பணிவிடை கருதிய மையாலேயே என்று கருதுகிறார் கா. சு. மேலும்,

சய்யக்