உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

43

ஒவ்வொருபதிகத்திலும் எட்டாம் பாட்டில்இராவணனுக்குச் சிவபெருமான் அருள் புரிந்ததையும், ஒன்பதாம் பாட்டில் மாலும் அயனும் அடிமுடி தேடியதையும், பத்தாம் பாட்டில் சமணர் சாக்கியரது இழிந்த கொள்கையையும் பற்றிக் கூறிப் பதினொன்றாம் பாட்டினைத் திருக்கடைக் காப்பாக அமைந்துள்ளமையைச் சேக்கிழார் சான்று கொண்டு விளக்கிக்

காட்டுகிறார். (41-46)

க்

தவறிழைத்தவர் அத்தவற்றை உணர்ந்து இறைவனை அடைக்கலம் புகுந்தால் இறையருள் கிட்டும் என்றும், மனஞ் செருக்கி மயக்கமடைந்தாரும் இறைவன் திருவடிப் புகழ் பாடின் அவன் அருள் கிட்டும் என்றும், இறையருள் நெறியை அறியாது பழி வழிச் செல்லும் சமயத்தர் குறையுடையவர் என்றும், பதிகம் ஓதுவதால் உண்டாகும் பயன் இன்னதாம் என்றும் முறையே அப்பாடல்களில் பாடப்பட்ட அமைப்பொழுங்கை விளக்குகிறார்.

திருக்கோலக்காவில் சிவபெருமான், செம்பொற்றாளங்கள் பிள்ளையார் திருக்கைகளில் வந்தமையுமாறு அருளிச் செய்தமை 'பிள்ளையாரது இன்னிசைத் தொண்டிற்கு இறைவன் மகிழ்ந்து அது செவ்வையாய் நடைபெறும் பொருட்டும், பிள்ளையார் செங்கைகள் நோவாதிருத்தற் பொருட்டும் தாமே தமது குழந்தைக்கு வேண்டியதை நல்கிய வாறாகும்” எனக் காரணம் குறிக்கிறார் கா. சு. “அத்தாளம் இறைவன் திருத் தொண்டிற்கே உரியது” என்பது காட்டவே அதில் திருவைந்தெழுத்துப் பொறிக்கப் பட்டிருந்தது என்கிறார். உலகத்தார் கருதிய பொருளை, இறைவன் அவர்களுக்குத் தோன்றாமலே மக்கள் வாயிலாகவே அளித்தருள்வர். தாமே நேரில் வேண்டியதை ஈதல் ஞானிகளுக்கே யன்றிப் பிறர்க்கன்று என்றும் கூறுகிறார்.

ஞானசம்பந்தரது தவயாத்திரை ஆராய்ச்சியால், திருத் தலங்களைத் தொலைவில் கண்டபோதே, தொழுது போற்றுதல் வேண்டும் என்பது, திருப்பதிகளின் எல்லையை அடைந்தவுடன் அப்பதியையும் திருக்கோபுரத்தையும் தாழ்ந்திறைஞ்ச வேண்டும் என்பதும், திருக்கோயில் வாயிலிற் பணிய வேண்டும் என்பதும், திருக்கோயிலுட் சென்றகாலை வலம் வருதல் வேண்டும் என்பதும், இறைவரைத் தொழுது மீளும்போது தாழ்ந்திறைஞ்ச வேண்டும் என்பதும், தொழுங் காலை சென்னி மேற் கைகுவித்தலும் என்பதுமாம் இம்முறைகள் விளங்கும் என அடைவு செய்து காட்டுகிறார் சிவப்பெருஞ் செம்மல் கா. சு. (72).