உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

இளங்குமரனார் தமிழ் வளம்

14

“பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற.”

என்னும் திருக்குறளைத் தம் அனுபவத்தில் கண்டவர் எல்லா ருள்ளும் சிவபாதவிருதயர், பகவதியார் ஆகிய இருவருமே தலைசிறந்தவராவர் என்று ஞானசம்பந்தர் திருவருட் புலமைச் சிறப்பை எண்ணிக் கொண்டு கா. சு. எழுதுகின்றார்.

66

என

சம்பந்தர் பிறந்தநாள் இறைவனுக்குரிய சிறந்த நாளாம். ஆதிரையாக இருத்தலைக் கொண்டு, 'இவர் சிவம் பெருக்கும் தன்மையர்' என்பதன் அறிகுறியாகக் கொள்கிறார். ஞான சம்பந்தர் திருமுருகன் திருப்பிறப்பாகக் கொள்ளும் செய்தியை, உபசாரமேயன்றி உண்மையாகாது' என விரித்துத் தெளி வுறுத்துகின்றார் (19-24). ஞானசம்பந்தர் திருத்தொண்டின் நிலை விளக்க வந்த அடியவர் என்பதையே ஆசிரியர் சேக்கிழார் பலவிடத்தும் விளக்குதலை எடுத்துக்காட்டி நிலைபெறுத்து கிறார். இவ்வாறு ஒவ்வொரு வரலாற்றுப் பகுதியின் நிறைவிலும் அப்பகுதியின் நுண்பொருளை ஆய்ந்துரைக்கும் நெறியை ள முறையாகப் போற்றுகின்றார் கா. சு.

6

பெருமான் பிள்ளைப் பருவத்திலேயே ஞானப்பால் உண்ட அருமையை உரைக்கும் கா. சு. மங்கையர்க்கரசியார் அழைப்பால் மதுரைக்கு வந்து அவர் முன் நின்று பேசும் போதும், ‘பால் நல்வாய் ஒரு பாலன்' ஆகவே இருந்த அகச் சான்றைக் காட்டி உறுதிப் படுத்துகிறார் (32). இற்றைக் காலத்திற் கூடச் சிறுமகார் சிலர் அளவற்ற கணித நூற் புலமை வல்லராய் ஒரு மணி நேரத்திற் செய்து முடிக்கக் கூடிய கணக்குகட்கு இரண்டொரு வினாடியில் முடிவு கூறவல்ல ஆற்றல் பெற்றிருத்தலைக் காண்கிறோம் என மெய்ப்பிக்கிறார்.

திருவருளினாலே இயற்கையறிவு விளக்கமெய்துவதாயின், அது ஒரு கணத்திலே நிகழும் என்னும் அறிஞர் கா. சு. பல விளக்குகளை ஒவ்வொன்றாகக் கொளுத்த வேண்டுமானால் மிகுந்த நேரஞ் செல்லும், பல மின்சார விளக்குகளை ஒரே கருவியின் இயக்கத்தால் ஒரு கணப் பொழுதில் ஏற்றி விடலாம் என அறிவியல் சான்று காட்டுகின்றார் (34).

ஞானசம்பந்தர் தமக்குப் பாலூட்டிய அம்மை அப்பரை சுட்டிக் காட்டியதைச் சிவபாதவிருதயர் கண்டார் அல்லர் என்பதைத் “தம்மைப்போல் காணுதல் பெற்றிலர்” என்பதனால் கூறுகிறார். (சம்பந்தர் பு. 86).