உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்த சுவாமிகள்

சரித்திரம்

1927 ஆம் ஆண்டு கழகத்தின் 88 ஆம் வெளியீடாக க வெளிப்பட்டது இந்நூல். இதற்கு முன்னரே ‘அப்பர் சுவாமிகள் சரித்திரம்' கழகத்தின் 68 ஆம் வெளியீடாக வந்தது.

முன்னரே அறிஞர் பலரால் ஞானசம்பந்தர் வரலாறு வெளி வந்திருந்தும் இவ்வரலாறு வெளிவருவானேன்?” என்னும் வினா, பதிப்பகத்தார்க்கு எழுந்துள்ளது அதனால், "முன்னர் வந்த புத்தகங்கள் எல்லாம் பெருமான் வரலாற்றினை மட்டும் சேக்கிழார் பெரிய புராணத்தின்படி சுருக்கியும் விரித்தும் கூறுகின்றனவே யல்லாது, இந்நூல் போல ஆராய்ச்சி முறையில் எழுதப் படவில்லை. ஆகலான், இது வெளிவர வேண்டியதாயிற்று” என்னும் மறுமொழி தந்துள்ளனர்.

வ்வரலாறு செல்லுமாற்றைப் பிரிவரிய ஊசிவழி, பின் தொடரும் நூல் போலப் பெரியபுராணத்திற்குச் சிறிதும் மாறு படாமல் எழுதப்பட்டிருக்கின்றது' என்று அப்பதிப்புரை கூறுகின்றது.

திருஞானசம்பந்தர் புகழ் மாலை என்பதை முதற்கண் கொண்ட இவ்வரலாற்று நூல், தோற்றுவாய், குழந்தைப் பருவம், ஞானப்பாலுண்டு திருவருள் பெறுதல், பொற்றாளம் முத்துச் சிவிகை பெறுதல், உபநயனம், முத்துப்பந்தர் பெறல் வணிகன் விடந்தீர்த்தல், திருமறைக் கதவு திறந்தடைத்தல், பாண்டிய நாட்டில் சமணரை வென்று சைவத்தை நிலை நாட்டுதல், புத்தரை வாதில் வென்றது, தொண்டை நாட்டு அற்புதங்கள், திருஞான சம்பந்தர் தேவார ஆராய்ச்சி, திருஞானசம்பந்தர் காலம், திருஞான சம்பந்தர் திருநாம விளக்கம் என்னும் தலைப்புகளில் இயல்கின்றது. நூலின் அளவு 280 பக்கங்களாகும். அந்தணர் என்போர் அறவோர்” என்பதற்கு இலக் கணமாக அமைந்த வாழ்வு ஞானசம்பந்தர் வாழ்வு என்பதைத் தோற்றுவாயில் குறிப்பாக உணர்த்துகிறார் தமிழ்க் கா. சு.

66

6