உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

இளங்குமரனார் தமிழ் வளம்

14

நூற் கட்டுப்பாடு, மணத் தடை, சடங்கு முறைக் கட்டுப்பாடு என்பவற்றுள் ஒன்றும் அதற்கு இல்லை. மொழிப் பற்றும் கொள்கையுமே இன்றியமையாதன. ஆதலின் தமிழர் சமயம் உலகப் பொது நெறியாய் விளங்குந் தகுதியுடையது.

-

இவை கா. சு. வகுத்தும், தொகுத்தும் காட்டும் சீர்திருத்தக் குறிப்புகளுள் சில

(107-147)

நூல்

சைவ அழுத்தமிக்க கா. சு. சைவ சமயமென எழுதாமல் தமிழர் சமயம் என்று பெயரிட்டு எழுதியமை சிவனெறி, மால்நெறி இரண்டும் தமிழர் சமயமே என்பதற்காகும். இதனை இரு சமயத்தாரும் உணர்ந்து போற்றல் இருபாலும் நலம் பயக்கும்.

‘தமிழர் மத’மென மறைமலையடிகளாரும், பாவாணரும் நூல் செய்தமை எண்ணத்தக்கது.