உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

39

தமிழரது ஆதி நூல்களில் ஆண்மக்களுக்குப் பெண்கள் அடிமை என்ற கருத்து இல்லை.

திருமணம் செய்து கொள்ளக் கூடிய வயது உள்ளவர்களாயும் விருப்பம் உள்ளவர்களாயும் இருக்கும் கைம் பெண்கள் மணம் செய்து கொள்வதால் இடையூறு ஒன்று மில்லை.

பல்வேறு குலத்தினர் குலத்தடையின்றிக் கலப்பு மணம் செய்வதற்குரிய சட்டம் இன்னும் நிறைவேறவில்லை. அது விரைவில் நிறைவேற வேண்டும் (இது எழுதி வெளிவந்த ஆண்டு

1940).

தமிழர்களுள் சைவர்களும் வைணவர்களும் தங்கள் கொள்கையின் ஒற்றுமையான அடிப்படையை உணர்ந்து வேற்றுமைகளைப் பாராட்டாது ஒத்த உணர்ச்சி உடையவர்களாய் அறிவாராய்ச்சியால் வரும் வழக்கீடுகளில் கலகம் விளையா திருப்பின் சமய உண்மைகள் யாவர்க்கும் தெளிவாக விளங்குதல் நேரும்.

வைணவர்களுக்குள் தமிழ்க்கலை ஒன்றே சிறப்பாகப் பேணப் படுமாயின் வடகலை தென்கலைச் சண்டைகள் ஒழிந்து போம்.

கலப்பு மணத்துக்கு இடையூறாக உள்ள விதிகளைச் சட்ட வாயிலாக ஒழித்தல் வேண்டும்.

வெவ்வேறு சமயத்தார் தம்முள் மணந்து கொள்வதற்குத் தமிழர் நெறி தடை ஏற்படுத்தவில்லை.

இன்னின்ன சட்டச் சீர்திருத்தம் வேண்டற்பாலது என்று தீர்மானிப்பதற்குத் தமிழருள் தக்க வழக்கறிஞர் சிலரைத் தெரிந் தெடுத்து ஒரு சிறு கழகம் அமைக்க வேண்டும்.

சிவில் சட்டத்தில் ஆண் பெண்களுக்குச் சொத்துரிமை கொடுக்கப்பட வேண்டும்.

சமமான

காதல் மணம், கலப்பு மணம், கைம்பெண் மணம் என்பவை தமிழருக்கு ஒத்தனவே, உடன் உண்பதற்கும், பெண் கொள்ளுதல், கொடுத்தல் செய்வதற்கும் பிறப்பினால் ஏற்படும் தடை

தமிழர்க்குக் கிடை யாது. கலப்பு மணச்சட்டம் தமிழர்

ஒற்றுமைக்கும் இந்தியர் ஒற்றுமைக்கும் அவசியமாய் நிறைவேற்றப் படுதற்குரியது.

உலகில் உள்ள எல்லாச் சமயங்களிலும் தமிழர் நெறியானது விரிந்த நோக்கமும் அமைப்பும் உடையது, பிறப்புத்தடை,