உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இளங்குமரனார் தமிழ் வளம் – 14

மனத்தின் இயல்பும், உயிரின் இயல்பும் ஆகமங்கள் கூறும் தத்துவங்களும் நிரலே ஆயப் படுகின்றன (81 - 107). சீர்திருத்தம் என்னும் பகுதி (107-147) விரிவாகவே அமைந்துள்ளது.

கோயில் தூய்மை, அறிவுக்குப் பொருந்திய வழிபாட்டு நெறி, தமிழில் வழிபாடு செய்தல், கோயில் அலுவலர் தகவு, வழிபாட்டில் ஒற்றுமை, தமிழர் சட்டம் என்பன இப்பகுதியில் நன்கு ஆயப் பட்டுள்ளன. அவற்றுள் சில கருத்துகள்!

கோயில்களின் மூலத்தானங்களையும் பிற இடங்களையும் எப்பொழுதும் புனிதமாக வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஆறுகாலத் திரு முழுக்கைப் பார்க்கிலும் இருகால ஒரு கால நீராட்டே போதுமானது.

நித்திய வழிபாட்டில் அறிவுக்குப் பொருத்தமான நெறிச் செயல்களைக் கோயில் வரும்படிக்குத் தக்கபடி செய்வித்தலே

நலம்.

பூசை முறைகளைத் தமிழிலே எழுதுவித்துப் பூசைகளைத் தமிழில் நடத்த அர்ச்சகர்களைப் பழக்குதல் வேண்டும்.

பிறப்பைப் பற்றிய உயர்வு தாழ்வு தமிழர் வழிபாட்டிற்கு

இல்லை.

சைவம் விரிந்த காள்கையுடை மையால் சைவ ஆசாரியர்கள் சமயம் புகுவித்தலாகிய தீக்கை செய்யுங்கால் மாணவன் கொடுக்கும் உணவைத் தாம் வாங்கி உண்பதும், தாம் கொடுக்கும் உணவை மாணவனை உண்பித்தலும் செய்து சிவத்தில் இருவரும் ஒற்றுமைப்படுதலாகிய நெறிச் செயல் (சடங்கு) செய்தல் விதிக்கப்பட்டுள்ளது.

உடலைப் பற்றிய சாதியினும் உயிரைப்பற்றிய சமயமே பெரியதென்பது சமயநூற் கொள்கை.

தமிழர் கோயில்களில் தமிழ்ப்பாடல்களுக்கு முதல் இடம் கொடுத்தல் வேண்டும்.

பிச்சைக்காரர்களுக்குத் தருமம் செய்ய விரும்பும் மக்கள் நன்கொடைகளை ஒருங்கு சேர்த்து ஏழைகளுக்குத் தொழிலும் உணவும் உதவும் நிலையங்களைக் கோயில் அதிகாரிகள் நிறுவி நடாத்த வேண்டும்.

ஆதீனத் தலைவர்கள் தமிழ் மொழியையும் தமிழர் சமயத்தையும் இரண்டு கண்களாகப் பாதுகாக்கக் கடமைப் பட்டிருக்கின்றார்கள்.