உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பர் சுவாமிகள் சரித்திரம்

இப்பெயருடைய நூல், குரோதன ஆண்டு பங்குனித் திங்களில் கழகத்தின் 68 ஆம் வெளியீடாக வந்தது. இரண்டாம் பதிப்பு 1927 இல் வெளிவந்துளது. கி. பி. 1926 ஆம் ஆண்டு கல்லூரி முதற் தேர்வுக்கு (Intermediate Examination) ப் பயிலும் மாணவர்க்குப் பாடமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

நால்வர் வரலாற்றிலும் முதற்கண் கா. சு. அவர்களால் வரையப்பட்டது அப்பரடிகள் வரலாறேயாம். ஆதலால் பின் எழுதப்பட்ட சமயகுரவர் வரலாறுகளுக்கு முன்னோடியாக அமைந்தது இவ்வரலாறு என்னும் சிறப்புக்குரிய தாகும்.

அப்பர் புகழ் மாலை என்னும் பகுதியினை நூன் முகப்பிலே கொண்டுளது இந்நூல். அடுத்துத் தோற்றுவாய், பிறப்பு, வரலாறு, சமண்சமயம் புகுதல், சமணர் தீமைகளும் நாயனார் அருள்வெற்றியும், திருப்பதிகள் சென்று சிவ வழிபாடாற்றல், ஆளுடைய பிள்ளையாரோடு அளவளாவுதல், திருவடிமலர் சூடப்பெறல், அப்பூதியடிகளார் அன்பின் திறம், பிற பதிகள் சென்று போற்றல், திருக்கயிலைத் திருக்கோலக் காட்சி, ஞான சம்பந்தரை மீண்டுங்காணல், திருநாவுக்கரசரது சிறப்புப் பெயர்கள், தேவார ஆராய்ச்சி, தேவாரத் திருக்குறட் கருத்தொருமை என்னும் பதினான்கு தலைப்புகளில் இயல்கின்றது நூல். இதன் பக்கங்கள் 152 ஆகும்.

புகழ்மாலையில் பரிய புராணம் புராணம் தொடங்கிப் பதினைந்து புராணங்களில் அப்பரடிகளைப் பற்றி அமைந்துள்ள புகழ்ப்பாடல்கள் ஒவ்வொன்றைத் தெரிந்தெடுத்துத் தேர்ந்தமைத்துள்ள அருமை தனிச்சிறு நூலாம் தகையது. திருநாவுக்கரசு வளர்திருத்தொண்டு -ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை”க்கு ஏக்குறும் சேக்கிழாரடிகளின் வாக்குத் தலைப் பட்டதுடன், தலைமைப் பட்டும் நிற்கின்றதாம்.

66

டையறாப் பேரன்பு' எனத் தொடங்கும் காஞ்சிப் புராணப்பாடல், நாவுக்கரசரை நம் கண்ணைவிட்டகலாத் திருக் காட்சியுடைய தாக்கித் திளைக்க வைக்கிறது. திருத்தொண்டின்