உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

>இளங்குமரனார் தமிழ் வளம் – 14

உறைப்பும், இடர்வென்ற திறமும் ஒவ்வொரு பாடலிலும் சுவை பெருகச் சொல்லப் பட்டுள்ளன.

"செயற்கரிய

செய்வார் பெரியர்' என்னும் 6 வாழ் விலக்கணத்தை விரித்து விளக்கி, ‘தந்நயங் கருதுவாரினும், பிறர் நயங்கருதுவோர் பெரியோராவர். பிறர் நயமானது குடிநலம், மரபுநலம், குலநலம், ஊர்நலம், நாட்டுநலம், உலகநலம் எனப் படிப்படியாக உயர்ந்து செல்லும். அவ்வாறே பிறருக்குச் செய்யப்படும் நலத்தின் உயர்விற்கு ஏற்ப அதனைச் செய்வோரும் பெருந்தன்மையில் மேம் பட்டவராவர். இம்மை, மறுமை, வீடு என்னும் மும்மைப் பயனையும் பெறுவிக்கும் பேரன்பையும், பேரறிவையும், உலகினர் யாவர்க்கும் தமது சொல்லாலும், செயலாலும் அளிக்கின்ற துறவறப் பெருநெறிப் பெரியோரே அருமை, பெருமை என்பவற்றிற்கு எஞ்ஞான்றும் அழிவில்லாத எல்லையாக இலங்குகின்றார்கள். அங்ஙனம் இலங்கும் பெரியோரிற் பெரியோரே நம் திருநாவுக்கரசர்” என நிறுவுகின்றார் கா. சு.

66

அப்பரடிகள் பிறந்த பெருமைத் தாம் திருமுனைப்பாடி நாட்டை, ஒழுக்கத்தில் நலஞ் சிறந்த குடிகள் நிறைந்த பல் வளமும் செறிந்து திருமகள் குதித்து விளையாட அமைந்தாற் போல விளங்கிற்று. ஆதலால் திரு முனைப்பு ஆடி நாடு என்று பெயர் பெற்றது போலும் என்கிறார் (5).

திருநாவுக்கரசு நாயனார் புராணத்துள் உழவின் சிறப்பையும் சோலையின் வளங்களையும் சிறப்பாக எடுத்துக் கூறுவதற்குக் காரணம், புராணத்திற்குரிய தலைவர் வேளாளராதல் பற்றிப் போலும் என்றுரைக்கும் கா. சு... ஞானசம்பந்தர் புராணத்தில் வேள்விச் சிறப்பும், தடுத்தாட் கொண்ட புராணத்தில் மகளிர் சிறப்பும் கூறினமையை எடுத்துரைத்து உறுதிப்படுத்துகின்றார். (7-8).

அப்பரடிகள் பிறந்த ஊர், எல்லாவகைத் திருவினும் சிறந்த சிவஞானத்தை உதிப்பிக்கும் பெரியவர் பிறக்கும் ஊரென்பதை திரு ஆம் ஊர் (திருவாமூர்) என்னும் சொற்றொடர் இனிது குறிக்கும் என்கிறார்.

புகழனார் பிரிந்த அளவில், மாதினியாரும் உடன் சன்றார். அவர் எவ்வாறு உயிர் நீத்தார் எனச் சேக்கிழார் விரித்துரைத்தாரல்லர் என்று கூறும் கா. சு., ஆரியப் படை கடந்த பாண்டியன் நெடுஞ் நெடுஞ்செழியன் உயிர் நீத்த காலத்தே,