உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

>இளங்குமரனார் தமிழ் வளம் – 14

சுந்தரர் சங்கிலியார்க்குப் பொய்யுறுதி கூற நினைத்து றைவரை வேண்டிக் வேண்டிக் கொண்ட போது, அவர் அதனை மறுத்துத் தடுத்தாட் கொள்ளாமல் இசைவார் போன்று நடந்து கொண்டமை, "சங்கிலியார் மணத்தினை நிகழ்த்தி நாயனாருக்கு ஊழ்வினைப் பயனை ஊட்டுவித்தற் பொருட்டும், இறைவன் பெரியோர்க்கும் சிறியோர்க்கும் நடுநின்று ஒருபாற் கோடாது அருள் புரிவர் என்னும் உண்மையை யாவருக்கும் வற்புறுத்தி யருளுதற்குமாம் என்கிறார் (132-3).

ஒற்றியூரைக் கடவேன் என்னும் உறுதிமொழியில் தப்பிய சுந்தரர்க்குக் கண்ணொளி போயிற்று. அதனைக் குறிப்பிடும் கா. சு., "சத்தியம் தவறினவர்க்குக் தண்டனை கிடைத்தல் திண்ணம் என்பதை உலகத்தாருக்கு அறிவுறுத்தியது ஆயிற்று. தம்முடைய தோழர் என்பதைப் பாராட்டாது குற்றங்கண்ட விடத்து அதற்குத் தக ஒறுத்தல் இறைவன் இயல்பு' என்கிறார்

(145).

6

கண் போகிய சுந்தரர்க்குக் கவலை பெருகிற்று. அக் கவலைக்குக் காரணம் காணுகிறார் கா. சு. ஞானக் கண்ணினாலே இறைவனை நாடும் அடியவர்க்கு ஊனக் கண்ணிற்கு ஈனம் வந்தாற்படும் இழுக்கு யாதுமில்லை. எனினும் தவறு நிகழ்வதற்கு ஏதுவாயிருந்த தமது சிறுமையையும், பிறர்க்கு நல்லதோர் எடுத்துக் காட்டானமைக்கு ஏதுவாகிய தன்வினையையும் நொந்து நாயனார் வருந்தினாராவர். இறைவனடியார்க்கு ஊனம் வராது என்ற உண்மையைத் தமது வாழ்க்கையால் நிலை நாட்டப் பெற்றிலாமை பற்றியும் நாயனார் துயருற்றனர் போலும் என்று கூறுகிறார். (146-7).

பரவையாரிடம் ஒருமுறைக்கு இருமுறை தூது சென் இறைவர் செய்கையை என்னும் கா. சு., முதற்கண்ணேயே தமது மெய்த் திருவடிவத்தைக் காணுதற்குரிய உள்ளப் பான்மை பரவையாருக்கு இல்லாமையால் அருச்சக வடிவங் கொண்டு போந்தனர் என்று கருதுதல் கூடும். அருச்சக வடிவங் கொண்டு வந்தவர் இறைவனே என்று குறிப்பால் உணர்ந்து கொண்ட பின்னரே, அவர்க்குத் தம் செய்கைமேல் சினமும் வெறுப்பும் நாயனார்மேல் கழிவிரக்கமும் உண்டாகித் தடையின்றி ஏற்றுக் கொண்டார் எனத் தெளிவாக்குகிறார்.

ஏயர்கோன் சுந்தரர் தம்மைக் காண வருவது அறிந்து அவர் வருவதற்கு முன்னரே உயிர் விட்டது. அந்நிலையில் சுந்தரர் வர, அத்துயர் வெளிப்படாவண்ணம் மறைத்து, அவரை வரவேற்க