உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

63

சுந்தரர் - பரவையார் திருமணம் குறிக்கும் கா. சு. மணத்தினைக் குறிப்பதற்கு யாதாவதொரு நெறிச் செயல் நிகழ்ந்திருக்க வேண்டும். மாலை மாற்றோ மங்கல நாண் பூட்டோ, ஆழி அணிதலோ இவற்றுள் யாதோ என்று ஆசிரியர் விளக்கவில்லை” என்கிறார் (81).

66

குண்டையூர்க் கிழார் ஒரு மொத்தமாகச் சுந்தரர்க்கு நெல் முதலியவை வழங்காது படி சமைத்தமையைக் கருதும் கா. சு. அவற்றை மிகுதியாகக் கொடுத்தால் எஞ்சியவற்றைப் பாது காத்து வைக்கும் கவலை சுந்தர மூர்த்திக்கும் பரவையார்க்கும் ஏற்படுமாதலின் அது நிகழாமைப் பொருட்டுப் படிசமைத் தார் போலும்' என்கிறார் (88).

இறைவன் அருளிய பொன்னை மணிமுத்தாற்றில் சுந்தரர் போடும்போது அதற்கு ‘மச்சம்’ வெட்டி வைத்துக் கொண்டார். பின்னர் ஆரூர்க் குளத்தில் அதனை எடுத்ததைக் குறிக்கும் கா. சு., இறைவனது பெருமையை உணர்த்தும் பொருட்டும், இறைவனது திருவிளையாடலுக் கேற்பத் தாமும் தோழமை பாராட்டக் கருதியும் என்க' என்கிறார் (106).

66

பசியும் வேட்கையும் பொருட்படுத்தாது தொண்டர் குடி வாழ்க்கையைச் செம்மை செய்வதிலேயே கருத்தூன்றிய வன் றொண்டர்க்கு இறைவன் வேண்டியன வெல்லாம் அருளியமையைக் கருதும் அறிஞர் கா. சு, 'குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம், மடிதற்றுத் தான் முந்துறும்' என்னும் திருக்குறளுக்கு எடுத்துக் காட்டாதலை விளக்கி இன்புறுகிறார் (113).

-

உழவர் குடியினரே அந்தணர் - அரசர் - வணிகர் வேளாளர் என்பதை, வேளாண்குடிச் சங்கிலியாரை மணந்த சுந்தரரைக் குறிக்குமிடத்து விளக்குகிறார் கா. சு. 'கொலை கடிந்து, புலவு நீக்கிக் கடவுட் பேணும் வேளாண் மரபின் ஒரு பகுதியாரே தமிழ்நாட்டுப் பார்ப்பாராகவும், வேளாளரால் முடி சூட்டப் பெறும் வேளாண் தலைவரே தமிழ் மன்னர் எனவும், விளைவித்த பொருளைப் பண்ட மாற்றின் பொருட்டுப் பல இடங்களுக்குக் கொண்டு போகும் வேளாளரே தமிழ்நாட்டு வணிகரெனவும், ஆராய்ச்சி வல்லுநர் முடிவு கட்டியிருப்பதால், மருத நிலத்துப் பெரு மரபினராகிய உழவரே தமிழ்நாட்டிலே நான்கு வகையாகப் பகுக்கப்பட்டனர் என்று தெளிக” என்கிறார் (125).