உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இளங்குமரனார் தமிழ் வளம்

14

காட்டும் கா. சு, புண்ணியத்தின் புண்ணியம் தெளிவிக்கிறார்.

என்பதைத்

புண்ணியம் என்ற சொல் காவமைத்தல் குளந்தொடுதல் முதலிய அறச் செயல்களை உணர்த்தும், இவற்றினும் சிறந்தது இறைவனை வழிபடுதல், ஆதலால், இறை வழிபாடு, புண்ணியத்தின் புண்ணியம் எனப்பட்டது, என்கிறார்.

66

பேர்பரவை என்று தொடங்கும் பாட்டில், பரவை என்ற சொல் ஆறு அல்லது ஏழு பொருள்களில் வழங்கப் பட்டுள்ளமை காணும் கா. சு. ங்ஙனம் சொல்லணி அமைத்தல் பெரிய புராணத்திற்குப் பிற்காலத்திலே தான் அந்தாதியிற் பெரிதும் வழங்கலாயிற்று” என்று ஆய்ந்துரைக்கிறார்

(74-75).

சுந்தரர் அறிவுத் திறச் சிறப்பைக் கண்டு களிப்புறும் கா. சு. வியப்புறுகிறார். “பாச நீக்கமுற்றுச் சிவன் கழற்கே மிகுந்த அன்புடையவராய்த் திகழ்ந்த நாயனார் அவர் அன்பினும் மேம்பட்டதோர் பற்றினைப் பரவை யாரைக் காணும் வரை அறியாதிருந்தனர். கண்ட பின்னர் தமது பேரன்பினையும் கீழ்ப் படுத்து மேற் செல்லுமோர் அவாவினைக் கண்டு வியப்புற்றும், அவ்வவாவினையும் திருவருளின் பாலே சார்த்தும் இயல் புடையராதலின் ‘ஈசனார் அருள் எந்நெறிச் சென்றதே' என்றனர். இங்ஙனத் திருவருளுடன் தமது அறிவை ஒட்டிப் பொருள்களை அறியும் அறிவே பேரறிஞர்க்குச் சிறப்பாகும்” எனப் பாராட்டுகின்றார். (76).

சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் தனியடியார் அறுபத்து மூவரைச் சுட்டியதை ஆயும் கா. சு., “அவர்கள் பெயரையும் பெருமையையும் அறிவதற்கு நாயனார் யாதொரு ஆராய்ச்சியும் செய்ததாகத் தெரியவில்லை. திருவருள் விளக்கத்தினாலேயே அவற்றை உணர்ந்து கூறினமையால் திருத் தொண்டத் தொகையின் உயர்வு நனி விளங்கும்' என்கிறார்

(83).

தொண்டர்களின் சிறப்புரைக்கும் சேக்கிழார் “ஒருமையால் உலகை வெல்வார்” என்றதைப் ‘பல் பொருளினும் கவர்பட்டுச் சன்றோடும் மனத்தை ஒருமுகப் படுத்திக் கடவுளோடு இரண்டறக் கலந்த அன்பர்கள் இறைவன் பற்றினைப் பற்றி உலகப் பற்றினை வென்றவராதலால் ஒருமையால் உலகை வென்றார் என்றார்' என்கிறார் (84).